மனித உடல் பற்றி நம்பமுடியாத சில உண்மைகள் !

0
1931

மனித உடல் (Human Body) என்பது இரத்தம், தசை, நரம்புகள், எலும்புகள் போன்ற இழையங்களாலான பல உள்ளுறுப்புக்களை கொண்டது.

இந்த மனித உடல் பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொண்டு நம்பமுடியாத உண்மைகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதோ மனித உடல் பற்றி நம்பமுடியாத சில உண்மைகள்

மனிதனின் தூக்கம்
மனிதன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவருடைய உயரம் 8 mm அதிகரிக்கும், தூங்கி எழுந்தபிறகு மீண்டும் பழைய உயரமே இருப்பார்.

இதற்கு காரணம் மனிதன் உட்காரும்போது அல்லது நிற்கும் போது புவி ஈர்ப்பு விசையின் காரணமாக எலும்புகளின் மீது ஏற்படும் அழுத்தமாகும்.

ரத்த நாளங்கள், செல்கள்
நமது உடல் எடையில் 14 சதவிகிதம் எலும்புகளால் ஆனது, 7 சதவிகிதம் ரத்தம் ஆகும்.

நுரையீரலில் 300,00 மில்லியன் ரத்த நாளங்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒன்று சேர்க்கப்பட்டால் அதன் நீளம் 2400 கிலோமீற்றராக இருக்கும்.

ஒவ்வொரு சிறுநீரகமும் ஒரு மில்லியன் வடிகட்டிகளை(Filters) கொண்டுள்ளது. அவைகள் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகிறது. மேலும் ஒரு நாளில் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது.

மனிதனின் ஒரு தனித்த ரத்த அணு, உடல் முழுவதையும் சுற்றிவர 60 வினாடிகள் மட்டுமே எடுத்துக் கொள்ளும்.

மனித உடலின் மிகப்பெரிய செல் பெண்ணின் கருமுட்டையாகும், மிகச்சிறிய செல் ஆணின் விந்தாகும்.

நமது உடலில் உள்ள ரத்தக் குழாய்களின் நீளம் சுமார் 600,000 மைல்கள். அதாவது இந்த தொலைவில் நாம் இரண்டு முறை உலகத்தை சுற்றி வந்துவிடலாம்.

தசை
கண்களின் தசையானது ஒருநாளில் 100,000 முறை அசைகிறது, அதற்கு சமமான வேலையை உங்கள் கால்களுக்கு கொடுக்க வேண்டும் என்றால் தினமும் 80 கிலோமீற்றர் தூரம் நடக்க வேண்டும்.

மனிதன் ஒரு அடி எடுத்து வைக்க 200 தசைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கால்கள்
காலின் பெருவிரல் இரண்டு எலும்புகளை கொண்டிருக்கும், ஆனால் மற்ற விரல்கள் ஒவ்வொன்றும் மூன்று எலும்புகளை கொண்டிருக்கும்.

கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாகும்.

மனித கால்களில் ஒரு ட்ரில்லியன் வரையிலான பக்டீரியாக்கள் இருக்கும்.

கண்கள்
நமது கண்களின் எடை சராசரியாக 28 கிராம், 500 விதமாக ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு.

மூளை
மனித மூளையில் சுமார் 100 பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன, 35 வயது அடைந்தது முதல் மூளையில் தினமும் 7000 நரம்பு செல்கள் இறக்கின்றன.

நாம் சுவாசிக்கும் மொத்த ஆக்சிஜனில் 20 சதவிகிதம் மூளைக்கு செல்கிறது.

நமது மூளை 80 சதவிகிதம் நீரால் ஆனது, மூளையின் செயல்திறன் பகலை விட இரவில் அதிகமாக இருக்கும்.

மனித மூளையில் 6 கிராம் அளவிற்கு தாமிரம் உள்ளது.

இறப்பு
மனிதன் உயிரிழந்த பின்பு உறுப்புகள் செயல் இழக்கும் நேரம்

கண்கள்- 31 நிமிடங்கள்

மூளை- 10 நிமிடங்கள்

கால்கள்- 4 மணிநேரம்

தசைகள்- 5 நாட்கள்

இதயம்- சில நிமிடங்கள்

நமது இதயம் ஒரு நாளில் 1,03,689 முறை துடிக்கிறது.

மனிதனின் நாக்கில் உள்ள சுவை அறியும் செல்களின் எண்ணிக்கை மூன்று ஆயிரம்.

உடலில் உள்ள மின்சாரத்தின் அளவு 25 வாட்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு 5 லிட்டர்.

கைரேகையைப் போலவே நாக்கில் உள்ள வரிகளும் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.

மனித உடலில் சதை அழுத்தம் அதிகம் உள்ள பகுதி நாக்கு.

கண் தானத்தில் கருப்பு விழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகின்றன.

900 பென்சில்களை தயாரிக்கும் அளவிற்கு மனித உடலில் கார்பன் சத்து இருக்கிறது.

மனித உடலில் மிகவும் பலமானது விரல் நகங்களே. அதில் கெராடின் சத்து உள்ளது, இது காண்டாமிருகத்தின் கொம்புகளில் காணப்படுவது, மரணத்திற்குப்பிறகும் கூட நகம் ஒன்றுமே ஆகாது.

Previous articleஆண்கள் அதன் அளவை பெ(ரிதா)க்க கடைப்பிடிக்க வேண்டிய‌ வழிமுறைகள் !
Next article16 பள்ளி மாணவிகள் கர்ப்பம்! அதிர்ச்சியில் உறைந்து போன பெற்றோர்கள்!