மஞ்சளை சேர்த்துக் கொண்டால் இந்த புற்றுநோய் வராது!

0

மஞ்சளின் மகிமையைப் பற்றி உங்களுக்கு எவரும் சொல்லித் தெரிய வேண்டாம். அதில் பல அரிய மருத்துவ குணங்களை பெற்றுள்ளது. இந்தியாவிலும் சைனாவிலும் மஞ்சளை ஆரம்ப காலங்களிலிருந்து பயன்படுத்தி வருகிறோம். அதனை உணவில் சேர்த்துக் கொள்வதால் புற்று நோய் வராது என கேள்விப்பட்டிருப்பீர்கள். இது குடல் புற்றுநோய் செல்களை அழிப்பது விஞ்ஞான பூர்வமாக இப்போது நிருபிக்கப்பட்டுள்ளது.

மஞ்சளிலுள்ள இரு முக்கிய ரசாயனங்கள் புற்றுநோயை அழிக்க பயன்படுபவை. அவை கர்க்யூமின், சிலிமெரின் ஆகியவைகளாகும். இவை இரண்டும் புற்றுநோய் செல்களை அழிக்கின்றனர். புற்றுநோய் வந்தவர்களுக்கு தரப்படும் கீமோதெரபி மற்றும் நச்சு மிகுந்த மருந்துக்களின் வீரியங்களால் உடலில் பல்வேறு பக்க விளைவுகள் உண்டாகின்றன்.

ஆனால் இந்த இரண்டு ரசாயனங்களும் எந்தவித பக்க விளைவும் இல்லாமல் புற்றுநோய் செல்களை அழித்து, அவற்றை பெருக விடாமலும் தடுக்கின்றன என்று அமெரிக்காவிலுள்ள செயின்ட் லூயிஸ் பல்கலைக் கழக உதவி பேராசிரியர் கூறுகிறார்.

ஆராய்ச்சியாளர்கள் குடலில் வரும் புற்றுநோய் செல்களுக்கு முதலில் கர்க்யூமின் கொடுத்து, பின்னர் செலிமெரின் கொடுத்தனர். இதனால் பெரும்பாலான குடல் புற்றுநோய் செல்கள் அழிந்தன என்று மதுரை காமராஜ பல்கலைக் கழக பேராசிரியர் இசக்கி கூறியிருக்கிறார்.

மேலும் மருத்துவ குணங்களைப் பெற்ற இவ்விரு ஃபைடோ கெமிக்கல்களும் இன்னும் நிறைய பலன்களைத் தரலாம். அவற்றை ஆய்வு செய்தால் இன்னும் இவற்றின் நன்மைகள் தெரிய வரும் என்று கூறுகிறார்.

மேலும் இவ்விரு ஃபைடோகெமிக்கல்கள் ஜீன். டி. என்.ஏ ஆகியவற்றில் எவ்வாறு செயல்படுகிறது, அவற்றின் பண்புகள் ஜீனில் எவ்வாறு வெளிப்படுகிறது என்னென்ன மாற்றங்களை அவை மரபணுக்களில் தருகிரது என ஆராய்ந்தால் இன்னும் நிறைய தெரிய வரலாம் என்று இசக்கி கூறியுள்ளார்.

அதே சமயம் இவ்விரு குர்கியூமின் மற்றும் சிலிமெரின் ஆகியவற்றை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் அவை ஆபத்தை விளைவிக்கும் என்று மேலும் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிறுநீர் கழிப்பது பற்றி நாம் பெரிதாக அறியாத 15 உண்மைகள்!
Next articleநகரப்புறத்தினருக்கு உண்டாகும் முக்கிய பாதிப்பு எது தெரியுமா!