மகிந்த! அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்பிடம் சரணடைந்தார்

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த கலந்துரையாடலுக்கான உத்தியோகபூர்வ அழைப்பினை அமெரிக்கா வெளியிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சந்திப்புக்கான உத்தியோகபூர்வ தினத்தினை அமெரிக்க இராஜாங்க திணைக்களம் விரைவில் அறிவிக்கும் என அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவுக்கு செல்லவுள்ள மஹிந்த, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உட்பட இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடவுள்ளதாக மறைமுகமாக மஹிந்த அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கோத்தபாயவின் அரசியல் செயற்பாடு குறித்து அமெரிக்க ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோத்தபாய ராஜபக்ஷ இலங்கை – அமெரிக்க பிரஜாவுரிகளை கொண்டவர் என்பதால், டொனால்ட் ட்ரம்புடனான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இதேவேளை, கடந்த வாரம் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதலைமறைவான நடிகை நிலானி! முதல் கணவருக்கு 2 குழந்தைகள்…! வெளியான தகவல்கள்!
Next articleதற்போதய நிலை காரணமாக‌ வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சி!