மகளா இருந்தாலும் தப்பு தப்புதான்! 10 மாத குழந்தையின் காரை மடக்கி பிடித்த பொலிஸ் தந்தை!

0

அமெரிக்காவில் உள்ள ஆர்லாண்டோ மகாணத்தின் சாலையில் 10 மாத பெண் குழந்தை பொம்மை காரை ஓட்டிக் கொண்டு செல்கிறது. அப்போது திீடீரென்று குழந்தையால் காரை நகர்த்த முடியவில்லை. என்னவென்று திரும்பி பார்த்தால் பின்னாடி ஆர்லாண்டோ நகர போலீசார் ஒருவர் குழந்தையின் காரை மெக்னேட் மூலம் நகர விடாமல் தடுக்கிறார்.

ஆனால் அந்த குழந்தையோ போலீசை பார்த்து சிரிக்கிறது. அவர் வேற யாருமில்லை. அந்த குழந்தையின் தந்தை தான். தவறான திசையில் காரை ஓட்டியதற்காக தனது மகளின் பொம்மை காரை போலீஸ் தந்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இந்த வீடியோவை அவரின் மனைவி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அடுத்த சில மணி நேரத்திலே இந்த வீடியோ வைரலானது. வீடியோ பார்த்த பலரும் க்யூட் வீடியோ,சூப்பர் போலீஸ் என்ற கருத்துக்களை பதிவு செய்துள்ளனர். இன்னும் சிலர் இதெல்லாம் ரொம்ப ஓவர் போலீஸ் என்ற ஜாலி கமெண்டையும் தெரிவித்துள்ளனர். எப்படி இருந்தாலும் தனது கடமையை தவறாமல் செய்த போலீஸுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டு தான்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவடகொரியவுக்குள் அதிரடியாக நுழைந்த ட்ரம்ப்! உலக அரங்கின் வரலாற்று நிகழ்வு!
Next articleபோராடி வீழ்ந்த இந்தியா! 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!