பொன் நிற மேனிக்கு அழகு தரும் நலங்கு மாவு! வீட்டிலேயே தயாரிப்ப்பது எப்படி!

0

இயற்கையான பொருட்களைக் கொண்டு எளிய முறையில் சருமத்தினைப் பராமரிக்க நலங்கு மாவு உதவும். நலங்குமாவினை உபயோகிப்பது என்பது பன்நெடுங்காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்துள்ளது.

நலங்குமாவில் இடம் பெற்றுள்ள பொருட்கள் எல்லா வகையான சருமத்தினரும் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்பது இதன் சிறப்பு அம்சமாகும்.

இன்றைய இளைஞர்களின் அழகிற்குப் பெரும் சவாலாக இருப்பது முகப் பரு. முகப் பருவிற்கு ஏராளானமான கிரீம்கள் மற்றும் லோசன்கள் தீர்வாக விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.
இவை அனைத்தும் செயற்கை வேதிப் பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இவற்றை உபயோகிக்கும் போது அவை சருமத்தில் பக்க விளைவை உண்டாக்கக் கூடும். இயற்கைப் பொருட்களால் தயார் செய்யப்படும் நலங்குமாவே இதற்கு சரியான தீர்வாகும்.
நலங்கு மாவினை தொடர்ந்து உபயோகிக்கும் போது முகப் பருவானது குறைவதுடன் நாளடைவில் மறைந்து மீண்டும் தோன்றாமல் போகும்.

முகப்பருவிற்கு அடுத்ததாக வியர்வை துர்நாற்றம் பெரும்பான்மையோரின் பிரச்சினையாக உள்ளது. இப்பிரச்சினைக்கு நிறைய பேர் செயற்கை வாசனைப் பொருட்களை (டியோடரண்ட்) உபயோகிக்கின்றனர்.

கையிடுக்குகளில் இவற்றைப் பயன்படுத்தும் போது சிலருக்கு கொப்புளங்கள், கட்டிகளை உருவாக்கிவிடும். நலங்குமாவினைப் பயன்படுத்தி வியர்வை துர்நாற்றத்தை விரட்டலாம். இதனை உபயோகிப்பதால் எவ்வித பக்க விளைவும் ஏற்படுவதில்லை என்பது நன்மை தரும் செய்தி.

பிறந்த குழந்தைகளுக்கு நலங்குமாவினை தேய்த்து குளிக்க வைப்பதால் குழந்தைகளின் சருமம் பாதுகாக்கப்படுகிறது. மேலும் குழந்தைகள் கொச்சை வாசனை நீங்கி நாள் முழுவதும் நல்ல வாசனையோடு திகழ்வர்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பயன்படும் நலங்குமாவினை வீட்டில் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தயாரிப்பது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
கடலைப் பருப்பு – 50 கிராம்
பாசிப் பருப்பு – 50 கிராம்
வசம்பு – 50 கிராம்
ரோஜா மொக்கு – 50 கிராம்
சீயக்காய் – 50 கிராம்
அரப்புத் தூள் – 50 கிராம்
வெட்டி வேர் – 50 கிராம்
விலாமிச்சை வேர் – 50 கிராம்
நன்னாரி வேர் – 50 கிராம்
கோரைக் கிழங்கு – 50 கிராம்
பூலாங்கிழங்கு – 50 கிராம்
கஸ்தூரி மஞ்சள் – 50 கிராம்
மஞ்சள் – 50 கிராம்
ஆவாரம்பூ – 50 கிராம்
வெந்தயம் – 50 கிராம்
பூவந்திக்கொட்டை – 50 கிராம்

செய்முறை
கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, வசம்பு, ரோஜா மொக்கு, சீயக்காய், அரப்புத் தூள், வெட்டி வேர், விலாமிச்சை வேர், நன்னாரி வேர், கோரைக் கிழங்கு, பூலாங்கிழங்கு, கஸ்தூரி மஞ்சள், மஞ்சள் , ஆவாரம்பூ, வெந்தயம், பூவந்திக்கொட்டை ஆகியவற்றை நன்கு சூடு ஏற வெயில் உலர்த்தவும்.பின் மிசினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும். பின் ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவையான அளவு எடுத்து உபயோகிக்கவும்.

குறிப்பு
நலங்கு மாவு தயார் செய்ய தேவையான மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும். ஆண்கள் பயன்படுத்தும் போது மஞ்சள் சேர்க்காமல் மற்ற பொருட்களைக் கொண்டு தயாரித்துக் கொள்ளலாம்.

ஏசியில் இருப்பவர்களுக்கு வரும் சில சரும பிரச்னைகள் வரும். அவர்கள் இந்த நலங்கு மாவை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். சோப்பை விட முடியாதவர்கள், சோப்பு போட்டு குளித்த உடன், சிறிதளவு நலங்கு மாவை, வாசம் வேண்டுவோர் பன்னீரிலும், மற்றவர்கள் தண்ணீரிலும் கலந்து பூசி குளிக்கலாம்.

சோரியாசிஸ் உட்பட சரும பிரச்னைகள் உள்ளவர்கள், வழக்கமான சிகிச்சையுடன், நலங்கு மாவு பூசி குளித்தால் விரைவில் குணம் பெறலாம். அழகு நிலையங்களுக்கு சென்று, ஆயிரக்கணக்கில் செலவழிப்பதை விட, இணையதளத்தில் அதிகவிலையுள்ள ரசாயன அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதை கெமிக்கல் அழகு சாதனப்பொட்களை பயன்படுத்துவதை விட முன்னோர்கள் காட்டிய இயற்கையில், இயற்கை மூலிகை பொருட்களை கொண்டு தயாரான நலங்கு மாவை பயன்படுத்துவது அழகு மற்றும் ஆரோக்கியம் இரண்டுக்கும் நல்லது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஈஸி டிப்ஸ் 100! இன்று சின்னக் குழந்தைகூட எனக்கு எவ்ளோ ஸ்ட்ரெஸ் தெரியுமா என்று கேட்கிறது.
Next articleஇதை அக்குளில் தடவினால், கருமையும் வராது ஷேவ் பண்ண அவசியம் இருக்காது!