பொதுமக்களுக்கு எச்சரிக்கை! இலங்கை முழுவதும் பரவும் வைரஸ் நோய்!

0

பொதுமக்களுக்கு எச்சரிக்கை! இலங்கை முழுவதும் பரவும் வைரஸ் நோய்!

இலங்கையில் இன்புளூவன்ஸா வைரஸ் தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவுவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இன்புளூவன்ஸா B என்ற வைரஸ் தொற்றே இவ்வாறு பரவி வருவதாக IDH வைத்தியசாலையின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். தும்மல் ஊடாக இந்த தொற்று மற்றவருக்கு பரவுவதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

காய்ச்சல், உடல் வலி, சளி , இருமல் போன்றவைகளே இந்த நோயின் அறிகுறிகள் என வைத்தியர் குறிப்பிட்டுள்ளார். இன்புளூவன்ஸா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அன்டிபயட்டிக் மருந்துகளை பெறுவதில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. உரிய மருந்துகளை பெற்றுக் கொள்ளவில்லை என்றால் அது நிமோனியா வரை கொண்டு செல்லும் ஆபத்துக்கள் உள்ளதாக வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர். வைத்தியரை நாடி பரிசோதிக்குமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகனடாவிலிருந்து உறவினர்களை பார்ப்பதற்காக யாழ்ப்பாணம் வந்திருந்த நபர் விபத்தினால் உயிரிழப்பு!
Next articleபூசனிக்காய் அம்பி! புதுமைப்பித்தன் சிறுகதை – Puthumai Pithan Sirukathai – Pusanikkai Ambi!