பேஸ்புக் பயன்படுத்தினால் மாத்திரமே இனி அமெரிக்கா செல்ல முடியும்!

0

அமெரிக்க வீசாவுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமது சமூக வளை தளங்கள் தொடர்பான தரவுகளை வழங்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

ஐந்து வருடங்களாக பாவிக்கும் மின்னஞ்சல் முகவரி மற்றும் சமூக வளை தளங்கள் தமது பெயர்கள் மற்றும் பாவனை காலம் என்பவற்றை விண்ணப்பதார்கள் சமர்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த நடவடிக்கையினூடாக 14.7 மில்லயன் மக்கள் பாதிப்படைவார்கள் என அந்த நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனினும் இராஜதந்திர ரீதியான செயற்பாடுகளுக்காக அமெரிக்க வீசாவை பெறுபவர்கள் இவ்வாறு தமது சமூக வளைத்தள தரவுகளை வழங்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் கல்விசார் வீசாவை பெறுபவர்கள் தமது சமூக வளைத்தள தரவுகளை வழங்க வேண்டுமென அமெரிக்க தரப்புக்கள் குறிப்பிடுகின்றன.

இந்த விடயம் தொடர்பில் அமெரிக்க குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமருத்துவம் படிப்பதே முதல் குறிக்கோள்! இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்!
Next articleபுகை கூட்டத்தில் இந்திரலோகத்து சிலையை போல வந்த மணப்பெண்! பார்வையாளர்களை அடிமையாக்கிய காட்சி!மகிழ்ச்சியின் உச்சத்தில் உறவினர்கள்!