பெர்முடா முக்கோணத்தில் திடீரென உருவான தீவு.. மர்மத்தின் உச்சம்!

0

பெர்முடா முக்கோணம் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இன்றைய நவீன அறிவியலால் கூட இன்னதென்று கூறமுடியாத மர்மங்களும், வியப்புகளும் அதிர்ச்சியும் நிறைந்த இடம் தான் பெர்முடா முக்கோணம்.

இது “சாத்தானின் முக்கோணம்’ என்றும் அழைக்கப்படுகிறது. பேரன்ஸ் கடல் பகுதியில் புளோரிடா நீரிணைப்பு, பகாமாஸ் மற்றும் மொத்த கரீபியன் தீவுகளையும் உள்ளடக்கிய அட்லாண்டிக்கின் கிழக்கிலிருந்து அசோர்ஸ் வரை ஒரு முக்கோணமாக அமைந்துள்ளது இது.

இந்த பகுதியில் ஏராளமான விமானங்களும், கப்பல்களும் பெர்முடா முக்கோணப்பகுதியில் மிகவும் மர்மமான முறையில் மறைந்திருக்கின்றன. ஆயினும், இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்னவென்று உறுதியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

கரீபியன் தீவை சேர்ந்த மக்களும்,முக்கோணப் பகுதியில் நிகழும் மர்ம சம்பவங்கள் அனைத்திற்கும் மனிதனுக்கு அப்பாற்பட்ட மாயச் சக்திகளே காரணம் என்று முழுமையாக நம்பினார்கள்.

பெர்முடா முக்கோணம் குறித்த திடுக்கிட வைக்கும் சுவாரஸ்யத் தகவல்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

கடலில் 440,000 மைல்கள் பரப்பளவைக் கொண்ட பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் சமீபத்தில் சிறிய தீவு ஒன்று உருவாகியுள்ளது.

சிறிய மணல் திட்டு போன்று இருந்த இது, நாட்கள் செல்ல செல்ல பெரிதாகி ஒரு தீவு போன்று மாறியுள்ளது, இது பார்ப்பதற்கு பிறை வடிவில் உள்ளது.

இந்த தீவிற்கு ஷெல்லி என்று பெயரிடப்பட்டுள்ளது, இந்த புதிய தீவு ஒரு மைல் நீளமும், 400 அடி அகலமும் கொண்டது. சங்கு சேகரிப்பாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் இந்த தீவுக்கு செல்வதில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும் பெரிய அளவிலான திமிங்கலங்களின் ஆதிக்கம் இருப்பதால் உள்ளூர்வாசிகள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும்.

ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த பெர்முடா முக்கோணத்தின் மத்தியில் சிறிய தீவு வேறு உருவாகியிருப்பதால் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொழும்பில் செல்வந்த தமிழ்இளைஞர்கள் கடத்தல்! பகிரங்கப்படும் அதிர்ச்சி வலையமைப்பு !!
Next articleவேறொரு நபருடன் மகன் செய்த காரியம்… தானாக சென்று உயிரைவிட்ட தந்தை!