புற்றுநோயாளிகள் காலையில் இஞ்சி சாறு கலந்து இந்த பானத்தினை மாத்திரம் தினமும் குடிங்க!

0

அனைவருக்குமே கேரட் ஜூஸை தினமும் குடிப்பது நல்லது என்று தெரியும். அதிலும் அந்த கேரட் ஜூஸ் உடன் இஞ்சி சாற்றினையும் சேர்த்துக் குடித்தால், உடல் நலம் மட்டுமின்றி, மன நலமும் மேம்படும்.

உடலின் ஆற்றலை அதிகரிக்க எனர்ஜி பானங்கள் கடைகளில் விற்கப்பட்டாலும், அவைகளால் உடலுக்கு எந்த ஒரு நன்மையும் விளைவதில்லை.

ஆனால் கேரட் மற்றும் இஞ்சியில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் உள்ளன. மேலும் இஞ்சி மருத்துவ குணம் நிறைந்த ஒன்று.

இந்த இரண்டையும் ஒன்றாக உட்கொள்ளும் போது, உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இங்கு கேரட் மற்றும் இஞ்சி ஜூஸை தினமும் காலையில் குடிப்பதால் பெறும் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

புற்றுநோய் செல்கள்
நற்பதமான கேரட், இஞ்சி ஜூஸ் பல்வேறு வகையான புற்றுநோய்களை எதிர்த்துப் போராடி பாதுகாப்பளிக்கும்.

குறிப்பாக கேரட் கருப்பை, குடல், நுரையீரல், மார்பகம் மற்றும் இதர புற்றுநோய்களை எதிர்த்து, உடலுக்கு பாதுகாப்பு வழங்கும்.

இஞ்சி புற்றுநோய் செல்கள் உடலில் பரவுவதைத் தடுக்கும்.

தேவையான பொருட்கள்
கேரட் – 4-5

இஞ்சி – 1/2 இன்ச்

ஆரஞ்சு/எலுமிச்சை – பாதி

பட்டை தூள் – சிறிது

உப்பு – சிறிது

செய்முறை
கேரட்டை நன்கு சுத்தமாக கழுவி, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.

இஞ்சியையும் நீரில் கழுவி தோலை நீக்கி துண்டுகளாக்கவும். பின் இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பின்பு அதில் ஆரஞ்சு/எலுமிச்சை சாற்றினையும், பட்டைத் தூளையும் சேர்த்து, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலந்து, காலை உணவின் போது ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிப்பலன் – 17.06.2019 திங்கட்கிழமை !
Next articleதந்தையர் தினத்தில் ஹரி – மேகன் தம்பதி வெளியிட்ட அற்புதமான புகைப்படம்!