புனிதத்தலங்களில் இரவில் குளிக்கலாமா?

0

புனிதத்தலங்களில் உள்ள குளம், ஆறு, கடலில் பகலில் குளிக்க நேரக்கட்டுபாடு கிடையாது. சூரியன் மறைந்த நேரத்தில் இருந்து மூன்றுமணி நேரத்திற்குள் குளிக்கலாம்.

உதாரணமாக, மாலை 6.30க்கு சூரியன் மறைந்தால் இரவு 9.30மணி வரை குளிக்கலாம். பின், இரவு 3.00 மணிக்கு மேல்தான் குளிக்கவேண்டும். சந்திரகிரகணத்தன்று மட்டும் முடியும் நேரம் எதுவாக இருந்தாலும் குளிக்கலாம்.

பிரபஞ்சமாக எங்கும் வியாபித்திருக்கும் இறைபொருளை தன் அருகே வைத்துப் பார்க்க மனிதன் ஆசை கொள்ளும்போதெல்லாம் ஆலயங்கள் எழுகின்றன. உயிர்களைக் காக்கும் பரம்பொருள் அன்புக்குக் கட்டுப்பட்டவன். ஆதலால்தான், அடியவர்களின் அன்புக்கு இணங்கி, ஆலயங்களில் வீற்றிருந்து புண்ணியம் பெற அழைக்கின்றான்.

ஆலயங்கள் வழிபாட்டுத் தலங்களாக இருப்பதோடு மட்டுமல்லாமல், நமது முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை உலகுக்கு உயர்த்திப் பிடிக்கும் பண்பாட்டுத் தளங்களாகவும் திகழ்கின்றன. மேலும், சுற்றுலாத் தலங்களாகவும் இருந்து நாட்டுக்கு வருமானத்தை ஈட்டிக் கொடுக்கின்றன. நம் புண்ணிய பாரதத்தில் இப்படிப்பட்ட ஆலயங்கள் ஏராளம் உள்ளன. ஆண்டவனின் அவதார தலங்கள் முதல், அரசர்களால் கட்டுவிக்கப்பட்டு ஆண்டவனின் அருள் பெற்ற ஆலயங்கள் வரை இவற்றில் அடங்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவீட்டில் செல்வம் பெருக செய்ய வேண்டிய எளிய பரிகாரம்!
Next articleவீட்டில் தெய்வ சக்தி நுழைய நாம் செய்ய வேண்டியவை என்ன?