நகம் வெட்டுவதில் அவதானம் தேவை! வேதனை தரும் ‘புதையுண்ட நகம்’! அதிகம் பகிருங்கள்!

0

புதையுண்ட நகம்: வேதனை தரும் ‘புதையுண்ட நகம்’ – நகம் வெட்டுவதில் அவதானம் தேவை
இவரது கால் பெருவிரல் நகத்தைப் பார்த்து இது என்ன அசிங்கமாக இருக்கிறது என்று கேட்காதீர்கள்.

பாவம் அவரது வேதனை அவருக்குத்தான் தெரியும்.

நகக் கரை ஓரமாகப் புண். நீண்ட காலமாக இருக்கிறது. அருகில் எங்கோ மருந்து கட்டிக் கொண்டு திரிகிறார்.

புண்ணும் மாறவில்லை வேதனையும் குறையவில்லை

புண்ணில் சதைவளர்ந்து நக ஓரத்தை மூடிக் கிடக்கிறது
உற்றுப் பார்த்தால் நோயுற்ற பகுதியில் உள்ள நகத்தின் நுனிப் பகுதி சதைக்குள் ஆழப் புதைந்து கிடப்பது தெரியும்.

மாறாக, நகத்தின் மறு கரை ஓரத்தை அவர் சற்று ஆழமாக வெட்டியிருப்பதை அவதானித்து இருப்பீர்கள். ஆனால் நல்ல காலமாக அது புண்படவில்லை.

நகத்தின் நுனியானது சதைக்குள் புதையுண்டு கிடந்து, அதன் மேல் தசை வளர்வதையே புதையுண்ட நகம் (Ingrown Toe nail) என்று சொல்லுவார்கள்.

இது ஏன் ஏற்படுகிறது?

முக்கிய காரணம் நகங்களை சரியான முறையில் வெட்டாமைதான்.

நகத்தின் ஓரங்களை நேராக வெட்டாமல் பிறை போல வளைத்து வெட்டும்போது நக ஓரத்தில் உள்ள சதையும் வெட்டுப்படும் அபாயம் உண்டு.

அவ்வாறு வெட்டினால் நகமானது வெளி நோக்கி வளராது தசைப் பகுதியை ஊடுறுத்து வளர முயல்வதால்தான் இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது.

நுனிப் பகுதியில் இறுக்கமான சப்பாத்துக்களை அணிவதும்,. குதி உயர்ந்த சப்பாத்துக்களை அணிவதும் காரணமாகலாம்.

அடிக்கடி விரல் நுனியில் காயங்கள் ஏற்படுவதும் காரணமாகலாம். உதாரணமாக கால்பந்து விளையாட்டின் போது அவ்வாறான காயங்கள் ஏற்படுவதுண்டு.

என்னிடம் வந்த ஒரு நோயளி தனது கவலையீனம் காரணமாக தனது விரல் நுனியை மேசை கதிரைகளில் அடிபடவி ட்ட காயங்களால் தான்அவ்வாறு ஆனது என்றார்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களிடம் வருவதும் அவதானிக்ப்பட்டுள்ளது.

இது பரம்பரை நோயல்ல. அவர்களது விரல் எலும் பு நகம் ஆகியவற்றின் வளைவு சற்று அதிகமாக இருப்பது காரணம் என நம்பப்படுகிறது.

இவ்வாறு நகம் புதையுண்டு போனால் வெறுமனே மருந்து கட்டுவதாலோ அன்ரிபயோடிக் மருந்துகளை உபயோகிப்பதாலோ சுகம் கிடைக்காது.

விரலை மரக்கச் செய்வதற்கு ஊசி போட்டு சதை வளர்ந்துள்ள பகுதியில் உள்ள நகத்தை வெட்டி எடுத்துவிட்டு மருந்து கட்டுவார்கள். முழு நகத்தையும் அகற்ற வேண்டிய தேவை இல்லை.

நகத்தின் அப் பகுதி மீண்டும் வளர்ந்து வரும் போது மீண்டும் நகம் பாதிப்பு அடையாமல் இருக்குமாறு கவனமாக இருங்கள்.

நகம் வெட்டும்போது வளைத்து வெட்டி நகக் கரையோர விரல் நுனி காயமடையாமல் பாதுகாப்பாக வெட்ட வேண்டும். அதாவது நகத்தை வளைத்து வெட்டாமல் நேராக வெட்டுங்கள்.
நுனிப் பகுதி இறுக்கமாக சப்பாத்து அணிய வேண்டாம்.
குதி உயர்ந்ததும் வேண்டாம்.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகத்தின் அழகை பிரதிபலிப்பதில் நகத்துக்கும் பங்கு உண்டு. உடல் உள்ளுறுப்புகளில் ஏதாவது பாதிப்பு இருந்தால் நகம் அதை வெளிக் காட்டி விடும். எனவே நகங்கள் பாதிக்கப்பட்டால், அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரிடம் சிகிச்சை பெற வேண்டும்.

நகங்களை முறையாக பராமரிக்க பலர் அக்கறை எடுத்து கொள்வது கிடையாது. வைட்டமின் சி குறைபாடு இருந்தால் நகங்கள் பாதிப்படையும். சில டென்ஷன் பார்ட்டிகளுக்கும் குழந்தைகளுக்கும் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கும். இது உடலுக்கு கேடு விளைவிக்க கூடியது. நகக்கணுக்களை நோய் கிருமிகள் அதிகம் தாக்கும். நகம் கடிக்கும் போது இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வதால் எளிதில் நோய்களுக்கு ஆளாக நேரிடும்.

உணவு சாப்பிடும் முன்பு கைகளை நன்கு கழுவ வேண்டும். பெண்கள் பாத்திரம் தேய்த்த பின்பு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். பாத்திரம் தேய்க்க பயன்படுத்தும் ரசாயனங்கள் நகக்கணுக்களில் தங்கிவிட்டால் நகங்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதேபோல் மலம் கழித்த பின்னரும் சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவ வேண்டும். குழந்தை பருவம் முதலே இத்தகைய பழக்கங்களை வாடிக்கையாக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகள் நக பராமரிப்பில் தனிகவனம் செலுத்துவது அவசியம். கை நகங்களை போலவே கால் நகங்களையும் முறையாக பராமரிக்க வேண்டும். பெரும்பாலான நோய்தொற்றுகளுக்கு நகமே முக்கிய காரணமாக உள்ளது. எனவே நகங்களை முறையாக பராமரிப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணலாம். பெடிக்யூர், மெனிக்யூர் என நகங்களை பராமரிக்க பிரத்யேக பராமரிப்பு முறைகளும் சாதனங்களும் உள்ளன.

இதற்கென அழகு நிலையங்கள் இருந்தாலும் வீட்டிலேயே செய்து கொள்வதும் எளிது. வாரத்தில் 2 அல்லது 3 முறை இந்த பராமரிப்பு முறையை செய்து கொள்ளலாம். நகங்களில் அடிபட்டாலோ, சொத்தை, நகச்சுற்று போன்ற பாதிப்புகள் இருந்தாலோ மருத்துவ சிகிச்சை பெறுவதே பாதுகாப்பானது.

மருத்துவ குணம் கொண்ட மருதாணி இலைகளை அரைத்து கைகளில் இடுவது நகங்களை பாதுகாப்பதோடு, உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

கடைகளில் பொடியாகவும், கூழாகவும் கிடைக்கும் மருதாணியில் மருத்துவ குணம் இருப்பதில்லை. தரமான நெயில் பாலிஷ்களை உபயோகிப்பது நகங்களுக்கு பாதுகாப்பானது. அடிக்கடி நகக்கணுக்களில் மிருதுவான பிரஷ் அல்லது துணிகளைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். நகம் வெட்டும் போது சதைப்பகுதி பாதிக்கப்படாமல் கவனமாக வெட்ட வேண்டும்.

நகங்கள் சிலருக்கு உடைந்து போகும். இதற்கு கால்சியம் குறைபாடுதான் காரணம். உணவில் அதிகம் கால்சியம் சேர்த்துக் கொள்வதாலும் மருத்துவர் பரிந்துரையின் பேரில் கால்சியம் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதாலும் இந்த பாதிப்பு சரியாகும். சர்க்கரை நோயாளிகள் இதில் அதிக கவனம் செலுத்துவது அவசியம். காய்கறிகள், பழங்கள் என ஊட்டச்சத்துள்ள சரிவிகித உணவு சாப்பிடுவதன் மூலம் நகங்களை பாதுகாக்கலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமூன்றே நாட்களில் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைய வேண்டுமா? அப்ப இத செய்யுங்க.
Next articleபசும் பாலுடன் இந்த இலையை அரைத்து தடவுங்க! பத்தே நாளில் பக்கவாதம் குணமாகும்!