புதினா இலைகளை கொஞ்சம் சாப்பிடுங்க செரிமானம், கல்லீரல் பிரச்சனைகள் ஓடிவிடும்!

0

புதினா இலைகள் சமையலுக்காக அதிகளவு பயன்படுத்தப்படுகிறது.

இதில் ஏராளாமான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. புதினா இலைகளை சமையலில் சேர்ப்பதினால் மற்றும் வெறுமனே சாப்பிடுவதினால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது.

செரிமானம்

இன்றைய வாழ்க்கை முறையில் அவசர அவசரமாக எதையாவது சாப்பிட்டு ஓடுவதாலும் உடல் அசைவுகளுக்கு அதிகமான வேலை தராததாலும் சாப்பிட்டவை செரிமானம் அடைவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகின்றன.இவற்றைத் தவிர்க்க புதினா இலைகள் உதவுகிறது. இவை எச்சில் சுரப்பை அதிகப்படுத்துவதால் செரிமானத்திற்கு தேவையான என்சைம்ஸ் அதிகப்படியாக உற்பத்தியாகும்.

கல்லீரல்

புதினா இலைகள் கல்லீரலை துரிதமாக வேலை செய்ய உதவுவதோடு கல்லீரலில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் அதனைத் தவிர்க்க உதவுகிறது.இதனால் தினமும் குடிக்கிற தண்ணீரில் இரண்டு புதினா இலைகளை போட்டுக் குடிக்கலாம் அல்லது தினம் வெறும் வயிற்றில் புதினா இலைகளை கடித்து சாப்பிடலாம்.

குளிர்ச்சி

புதினாவிற்கு இயற்கையாகவே உடலை குளிர்விக்கும் தன்மை உள்ளதால் வெயில் காலங்களில் புதினா நீரை தொடர்ந்து குடிக்கலாம். இதனால் டீ ஹைட்ரேசன் வராமல் தவிர்க்கப்படுவதோடு உடலின் வெப்பநிலை சரிசமமாகவும் இருக்கும்.

வாயுத்தொல்லை

புதினாவில் உள்ள அமிலங்கள் உணவை துரிதமாக செரிமானம் செய்ய உதவிடுகிறது. இதனால் வயிற்றில் ஏற்படக்கூடிய செரிமானக் கோளாறுகள் தவிர்க்கப்படும். குறிப்பாக வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும். சமையலாக அல்லாமல் புதினாவை கொதிக்க வைத்த நீரை குடிக்கலாம்.

புற்றுநோய்

புதினாவில் செல்களுக்கு வலுவூட்டும் சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவற்றை தொடர்ந்து எடுத்துக் கொள்வதினால் செல்களில் புற்றுநோய் வளர்ச்சியை தடுத்திடும். அதோடு உள் உறுப்புகளை துரிதமாக செயல்பட வைக்கிறது.

பற்கள்

புதினாவில் இருக்கிற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் ஈறுகளை வலுவாக்குவதோடு பற்களில் ஒளிந்திருக்கும் கிருமிகளையும் அகற்றுகிறது.வெங்காயம் பூண்டு ஆகியவை சாப்பிட்டால் ஒரு கெட்ட நாற்றம் வருமே அதனைப் போக்கவும் புதினா சாப்பிடலாம்.

-அனைவருக்கும் பகிருங்கள்! மேலும் பல பயனுள்ள தகவல்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த பழங்களை தொடர்ந்து சாப்பிட்டால் சிறுநீரக நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்!
Next articleஆண்களே ஆண்மை குறைவை தடுக்க கணணியை இப்படி பயன்படுத்துங்கள்!