Home thatstamil one india tamil oneindia tamil பிறந்ததும் குழந்தை செய்த காரியம்! புகைப்படமாக வெளியிட்டு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிக்பாஸ் கணேஷ்!

பிறந்ததும் குழந்தை செய்த காரியம்! புகைப்படமாக வெளியிட்டு உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பிக்பாஸ் கணேஷ்!

0
458

கடந்த 2017ம் ஆண்டு க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் “அபியும் நானும்”படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘கோ’ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமனார்.

தொலைக்காட்சி தொகுப்பாளினியும் மற்றும் சின்னத்திரை நடிகையுமான‌ நிஷாவை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி சில வருடங்கள் கடந்துள்ள நிலையில் கர்ப்பமான விஷயத்தை தெரிவுபடுத்தியதோடு சமீபத்தில் பாரம்பரிய முறைப்படி சீமந்தமும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில் கணேஷ் மற்றும் நிஷா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு குழந்தையின் கியூட் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Previous articleகடற்கரையில் உயிருடன் கரை ஒதுங்கியது ஆபத்தான பாம்பு மீன்! இது ஆபத்தின் அறிகுறியா! தீயாய் பரவும் புகைப்படம்!
Next articleஉறவாக நினைத்தவரை தூக்கியெறிந்த மோகன்! ஈழத்து பெண் லொஸ்லியாவின் கதறல்! கமலின் புதிய ப்ரொமோ!