பிரித்தானியாவில் குடி போதையில் இருந்த இளைஞர்களை இரயில் விபத்தில் சிக்கவிடாமல் காப்பாற்றிய நபருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள Green park station-ல் கடந்த 1-ஆம் திகதி Boguslaw Rybski என்ற இளைஞரும் Przemyslaw Zawisza என்ற இளைஞரும் குடி போதையில் இருந்துள்ளனர்.அப்போது இரயில் நிலையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இவர்கள் அதன் பின் சண்டை போட ஆரம்பித்துள்ளனர்.
ஒருகட்டத்தில் இருவரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டதால், இரயில் நிலைத்தில் உள்ள தண்டவாளத்தில் கீழே விழுந்துள்ளனர்.அந்த நேரத்தில் குறித்த தண்டவாளத்தில் இரயில் ஒன்று வேகமாக வந்து கொண்டிருப்பதைக் கண்ட பிளாட்பாரத்தில் இருந்த நபர் அவர்கள் இருவரையும் இரயில் வருவதற்குள் தூக்கியுள்ளார்.
நூலிழையில் அவர்கள் தப்பிய வீடியோ அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியதால் தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.அதுமட்டுமின்றி இரயில் நிலையத்தில் குடி போதையில் இது போன்ற செயலில் ஈடுபட்டதால் பொலிசார் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளனர்.
மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்!