இப்படியும் ஒரு கொடிய விஷமுள்ள பாம்பா? ஹோட்டலில் தங்கியவர் கோமா நிலைக்கு சென்ற பரிதாபம்!

0

சீனாவில் கொடிய விஷமுள்ள பாம்பு கடித்ததால், அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்ட சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Guangxi மாகாணத்தைதின் Nanning பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்காக Liuzhou நகரத்தைச் சேர்ந்த Wei(34) என்பவர் கடந்த 2-ஆம் திகதி சென்றுள்ளார்.

அப்போது திடீரென்று தான் தங்கியிருந்த அறையில் இருந்து ஹோட்டலின் வரவேற்பு அறையில் இருக்கும் ஊழியர்களை போனில் தொடர்பு கொண்டு நான் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் விரைந்து அங்கே சென்ற ஊழியர்கள் அவரை எழுப்ப முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர் எழவில்லை.

சந்தேகமடைந்த அவர்கள் அவரை சோதித்த போது அவர் அணிந்திருந்த டிரவுசரின் வலது காலின் உள்ளே உலகில் கொடிய விஷமுள்ள பாம்புகளில் ஒன்றான krait இனத்தைச் சேர்ந்த பாம்பு இருந்துள்ளது.

அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக அவரை Guangxi பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அப்போது மருத்துவர்கள் உடலில் இருந்து விஷத்தை முறிப்பதற்கான மருந்தை செலுத்தியுள்ளனர். ஆனால் சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாத காரணத்தினால் அவர் கோமா நிலைக்கு சென்றுவிட்டதாக கூறியுள்ளனர்.

கொடிய விஷம் கொண்ட krait இன பாம்பு தென் கிழக்கு ஆசிய பகுதிகளில் அதிகம் காணப்படும் எனவும், ஹோட்டலில் இருந்த அந்தை பாம்பை பத்திரமாக பிடித்த ஹோட்டல் ஊழியர்கள் அதை வனவிலங்கு பாதுகாப்பு மையத்துக்கு அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரித்தானியாவில் இரயில் நிலையத்தில் நடக்கவிருந்த விபரீதம்: நுலிழையில் தப்பிய இளைஞர்கள்!
Next articleகாதல் திருமணம் செய்த மகளை ஒரு வருடம் கழித்து தீர்த்து கட்டிய குடும்பம்: ஏன் தெரியுமா?