உடல் வீக்கம் மற்றும் அடிபட்டதால் ஏற்படும் வீக்கம் என்பவற்றை குணப்படுத்த!

0

அறிகுறிகள்:

அடிபட்டதால் ஏற்படும் வீக்கம்.

தேவையானவை:

சுக்கு, புளி,

கடுக்காய்.

செய்முறை:

சுக்கு, புளி, கடுக்காய்த் தோல் ஆகிய மூன்றையும் நன்கு இடித்து 500 மி.லி தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்துக் குழம்பு பதத்திற்கு சுண்டியதும் எடுத்து ஒரு நாளைக்கு 3 முறை பற்றுப்போட்டு வந்தால் உடம்பில் அடிப்பட்டதால் ஏற்பட்ட வீக்கம் குறையும்.

அறிகுறிகள்:

உடலில் வீக்கம்

சொறி மற்றும் சிரங்கு.

தேவையானவை:

மல்லிகைப்பூ.

செய்முறை:

மல்லிகைப்பூவை நன்றாக அரைத்து உடலில் வீக்கமுள்ள இடங்களில் தடவி வந்தால் வீக்கம் குறையும். சொறி, சிரங்கு, நமைச்சல் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும்.

அறிகுறிகள்:

உடலில் வீக்கம் ஏற்படுதல்.

தேவையானவை:

பிரம்மத்தண்டு

செய்முறை:

பிரமத்தண்டு இலையை சாறு எடுத்துச் சட்டியில் ஊற்றி கொதிக்க வைத்து அதனுடன் 5 கிராம் கற்பூரத்தைச் சேர்த்துக் நன்றாக கலக்கி வீக்கத்தின் மேல் தொடர்ந்து பூசி வந்தால் வீக்கம் குறையும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநடந்தது என்ன தெரியுமா? ஹோட்டலில் நடிகர் ரியோவுடன் செல்பி எடுத்த பெண்ணை அறைந்த காதலன்!
Next articleமுதுகு வலியை முடிவுக்கு கொண்டுவர சில டிப்ஸ் !