பிக்பாஸ் சீசன் 3! முதல் போட்டியாளர் இவர் தான்! புகைப்படம்!

0

பிரபல தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக முடிவடைந்தது.

இந்நிலையில், பிக்பாஸ் சீசன் 3க்கான செட்டுகள் அமைக்கும் பணிகள் நேற்று (மே 8) துவங்கியுள்ளது. படுமும்முரமாக நடைபெற்று வரும் இந்த பணிகள் அநேகமாக இந்த மாதம் இறுதிக்கும் முடிவடைந்து அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்க இருக்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வழக்கம் போல விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. கடந்த இரண்டு சீசனை போல கமல்தான் இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சி வரும் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்தில் துவங்க இருக்கிறது. இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல் போட்டியாளரை பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சமீபத்தில் வந்த தகவலின்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக நடிகை சாந்தினி தமிழரசன் தேர்வாகியுள்ளதாக கூறப்படுகிறது.சாந்தினி தமிழரசன் தமிழில் வில் அம்பு, ராஜா ரங்குஸ்கி சீரியல் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் நடன இயக்குனரான நந்தா என்பவரை சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

சாந்தினி தமிழரசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதேபோல பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பிரபல நடிகைகளான சுதா சந்திரன், லைலா, சாக்ஷி அகர்வால் போன்றவர்களும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான பேச்சுவார்த்தைகளும் படுமும்முரமாக நடைபெற்று வருகிறதாம் அதேபோல விரைவில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் புரோமோ வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதீவிரவாதிகளின் முகாமில் கைப்பற்றிய சஹ்ரானின் மடிக்கணனி மூலம் அம்பலமான ஐ.எஸ் வலையமைப்பு இரகசியங்கள்!
Next articleஒரே பார்வையில் நீருக்குள் இருந்து மீனை மடக்கி பிடித்த நாய்! என்ன ஒரு சர்ப்ரைஸ் காட்சி!