பித்த வெடிப்பால் பாதங்கள் வறண்டு காணப்படுகின்றதா? இதோ சூப்பர் ஜடியா!

0

பாத வெடிப்புகள் உடலில் உள்ள ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உண்டாகிறது மற்றும் கடினமான செருப்பு அணிவதானலும் சிலருக்கு சவர்க்காரங்களில் உள்ள கெமிக்கல் ஒவ்வாமையினால் வெடிப்பு உண்டாகும்.

சிலர் பாதங்களை சுத்தமாக வைத்து கொள்வது இல்லை. இதனாலும் பாத வெடிப்புகள் வர இதுவும் ஒரு காரணமாக இருக்கும்.

இதற்காக நாம் அழகு நிலையத்திற்கு செல்ல தேவையில்லை வீட்டிலேயிருந்து இதனை எளிய முறையில் போக்கலாம்.

தினமும் கால்களை வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 10 நிமிடங்கள் ஊற வைத்து அதன் பின் கருங்கல் கொண்டு தேய்து வர பித்த வெடிப்பு நீங்கி பாதங்கள் கவர்ச்சியாக காட்சியளிக்கும்.

தினமும் இரவு உறங்கும் போது பாதங்களில் மாய்சுரைசர் அல்லது வாசலின் தடவி பின்னர் காலுறை அணிந்து உறங்க வேண்டும். இதனால் பாதங்கள் மிருதுவாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும்.

இரவு உறங்கும் முன்னர் ஒரு டீஸ்பூன் நீர்க்காத கிளிசரின், 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை கலந்து, கால் பித்த வெடிப்பின் மீது தடவி இரவு முழுவதும் அதை அப்படியே விட்டு விட்டு காலை எழுந்தவுடன் வெது வெதுப்பான நீரில் காலை சுத்தமாக கழுவி வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.

டீஸ்பூன் அரிசி மாவுடன் கொஞ்சம் தேன் மற்றும் ஆப்பிள் சீடர் வினீகரை சேர்த்து, அடர்த்தியான பேஸ்ட் தயார் செய்து பூசி வந்தால் பாதங்கள் ஈரப்பதத்துடன் பொழிவுற்று காணப்படும்.

ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் அல்லது இனிப்பு பாதாம் எண்ணெயை சேர்த்து, வெது வெதுப்பான நீரில் பாதங்களை, 10 நிமிடம் வரை ஊற வைத்து கழுவிய பின், அந்த பேஸ்ட்டை பாதத்தில் தேய்க்கவும். இவ்வாறு செய்வதனால் பாதத்தில் ஏற்பட்ட வறட்சி தன்மை காணமால் போய்விடும்.

தேன் அல்லது ஆலிவ் எண்ணெயை தொடர்ச்சியாக ஒரு வாரத்திற்கு தினமும் ஒரு முறை செய்து வந்தால், பித்த வெடிப்புகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து நீரில் கழுவ குதிகால் வெடிப்பு மறையும்.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை ஊற்றி பாதங்களை வாரம் ஒருமுறை 10 நிமிடம் ஊற வைத்து வந்தால் பாதங்கள் மென்மையுடன் தோற்றமளிக்கும்.

பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் உள்ள வெடிப்பு பகுதியில் தேய்த்து வந்தால் குதிகால் வெடிப்பு காணமால் போய்விடும்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

கடுகு எண்ணெயை தினமும் கால் பாதத்தில் தேய்த்து கழுவி வந்தால், சொரசொரப்பு தன்மை நீங்கி, மிருதுவாக காட்சியளிக்கும்.

விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்துக் கொண்டு, அதனுடன் மஞ்சளை சேர்த்து கலந்து பாதங்களில் தடவினால் பித்த வெடிப்புகள் நீங்கும்.

ஆமணக்கு இலை, சீந்தில்கொடி, குப்பை மேனி ஆகிய மூன்றையும் சேர்த்து தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு அந்த எண்ணெய்யை இரவு படுக்கப் போகும் முன்னர் பாதங்களில் தடவிக் கொள்ள வேண்டும் இவ்வாறு செய்துக் கொண்டே வந்தால் நாளாடைவில் சிறந்த பலனை காணலாம்.

தினமும் இரவு தூங்க போவதற்கு முன்னர் கால்களில் தேங்காய் எண்ணெய்யை தடவிக் கொண்டு உறங்கினால் கால்களில் உள்ள பித்த வெடிப்புகள் சீக்கிரமாக குறைந்து விடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசர்க்கரை நோயாளிகள் இந்த பழத்தினை சாப்பிடலாமா?
Next articleகரும்புள்ளிகள் நீங்கி முகம் பளிச்சிட உதவும் அழகு குறிப்புகள்!