பற்களை உறுதியாக்கும் கருப்பட்டியின் எண்ணற்ற மருத்துவக் குணங்கள்!

0

பற்களை உறுதியாக்கும் கருப்பட்டியின் எண்ணற்ற மருத்துவக் குணங்கள்.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீரில் இருந்து தயாரிக்கப்படுவதே கருப்பட்டி. இதை, பனைவெல்லம் என்றும் சொல்வார்கள். வெறும் இனிப்புச்சுவை மட்டுமின்றி, மருத்துவக் குணமும் நிறைந்தது கருப்பட்டி.

-கால்சியம் மிகுந்திருப்பதால் பற்களும் எலும்புகளும் உறுதியாகும்.

-பருவமடைந்த பெண்களுக்குக் கருப்பட்டி சேர்த்து உளுந்தங்களியும் வெந்தயக்களியும் செய்து தருவார்கள். இந்தக் களிகள், இடுப்பு வலுப்பெற உதவுவதுடன் கருப்பைக்கும் ஆரோக்கியம் தரும். கருப்பட்டியுடன் எள் சேர்த்து இடித்து அவ்வப்போது சாப்பிடுவதாலும் கருப்பை வலுப்பெறும்.

-கருப்பட்டி, ரத்தத்தைச் சுத்திகரித்து விருத்தியாக்குவதால் மனமும் உடலும் உற்சாகமாக இருக்கும்.

-சர்க்கரை நோயாளிகள் குறைந்த அளவில் கருப்பட்டியை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

-அம்மை நோய்க்கு கருப்பட்டி மிகச்சிறந்த மருந்து. நோய் எதிர்ப்பானாகவும் தடுப்பானாகவும் செயல்படும்.

-சீரகத்தை வறுத்து, சுக்கு, மிளகு, ஓமம், கொத்தமல்லி, கருப்பட்டி சேர்த்து, சுக்குக்காபி செய்து குடித்தால் உடல் புத்துணர்ச்சி பெறும். வாய்வுத்தொல்லை நீங்கி நன்றாகப் பசியெடுக்கும்.

-கருப்பட்டியில் இரும்புச்சத்து நிறைந்திருக்கிறது. சோர்வு, முடி உதிர்தல், ரத்தச்சோகை போன்றவற்றுக்கு கருப்பட்டி நல்லது.

-இருமல், சளித்தொல்லையால் தவிப்பவர்கள், குப்பைமேனி, துளசி, ஆடாதொடை சாற்றுடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிடுவது நல்லது.

-பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் வயிற்றுவலி குணமாக, பீட்ரூட் மற்றும் மாதுளை ஜூஸில் கருப்பட்டி சேர்த்துப் பருகலாம்.

-உலர்திராட்சை, நிலக்கடலை, செவ்வாழைப்பழம், பசும்பால், கருப்பட்டி கலந்த சாற்றைக் காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் ஆண்மை அதிகரிக்கும்.

-குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் நிலக்கடலையுடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டால் பால் சுரப்பு பெருகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎண்ணெய் வழிந்தவாறே அசிங்கமாக இருக்கும் முகத்தை அழகாக்க சில இயற்கை முறைகள்!
Next articleபருவினால் ஏற்படும் தழும்பை மறைய வைக்க சில இயற்கை வழிகள்!