பர்ஃப்யூம் உங்களுக்கு புற்றுநோய் உண்டாக்கும் என தெரியுமா?

0

குளிக்க மறக்கும் நபர்கள் கூட இருப்பார்கள் ஆனால், டியோடரண்ட், பர்ஃப்யூம் அடித்துக் கொள்ள மறக்கும் நபர்கள் மிகவும் குறைவு தான். ஆம், பெரிய வேலை, மாடர்ன் வாழ்க்கை என அடுத்த லெவலுக்கு செல்லும் அனைவரும் டியோடரண்ட், பர்ஃப்யூம் அடித்துக் கொள்ளும் பழக்கம் கட்டாயம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என கருதுகின்றனர்.

ஆனால், தினமும் டியோடரண்ட், பர்ஃப்யூம் அடித்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள், ஆரோக்கிய கோளாறுகள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

அல்சைமர்!
அலுமினியம் சேர்ந்துள்ள டியோடரண்ட், பர்ஃப்யூம் பயன்படுத்துவதால் அல்சைமர் நோய் ஏற்படலாம். டிமென்ஷியா அல்லது அல்சைமர் நோய் ஞாபக மறதியை ஏற்படும் நோய் ஆகும்.

இது குறிப்பாக 40-50 வயதினை தாண்டும் போது தான் ஏற்படும். இதனால் எண்ணுவது மற்றும் பேசும் திறனில் கூட தாக்கம் ஏற்படும். டியோடரண்ட், பர்ஃப்யூம் பயன்பாட்டின் பல பக்கவிளைவுகளில் ஒன்றாக இது விளங்குகிறது.

பிறப்பு தாக்கங்கள்!
பாராபென்ஸ், ப்தலேத்ஸ் (parabens and phthalates) போன்ற அபாயமான கலப்பு உள்ள டியோடரண்ட், பர்ஃப்யூம் பிறப்பு குறைபாடுகள் உண்டாக காரணியாக இருக்கின்றன. இது கர்ப்பமாக இருக்கும் போது அதிகமாக இந்த கெமிக்கல் தாக்கம் ஏற்பட்ட பெண்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் அறியப்பட்டது. இது அடுத்த சந்ததியினரை வெகுவாக பாதிக்கும்.

பூப்படைதல்!
டியோடரண்ட், பர்ஃப்யூம்களில் காணப்படும் சில கெமிக்கல்கள் பெண்கள் குழந்தைகள் சீக்கிரமாக அல்லது சிறிய வயதிலேயே பூப்படைய செய்கின்றன. எனவே, பெற்றோர் குழந்தைகள் டியோடரண்ட், பர்ஃப்யூம் பயன்படுத்துவதை தவிர்க்க செய்ய வேண்டும்.

மார்பக புற்றுநோய்!
அதிக டியோடரண்ட், பர்ஃப்யூம் பயன்பாட்டால் ஏற்படும் பெரிய பக்கவிளைவு மார்பக புற்றுநோய். இது ஆண்கள் மத்தியிலும் அதிகமாக உண்டாக இவை காரணியாக இருக்கின்றன. முக்கியமாக அக்குள் பகுதிகளில் அதிகமாக டியோடரண்ட், பர்ஃப்யூம் பயன்படுத்துவோருக்கு தான் இந்த மார்பக புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இது மார்பக திசுக்களில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனை தூண்டி, மார்பக திசுக்களை வளர செய்து, மார்பக புற்றுநோய் உண்டாகும் வாய்ப்பை அதிகப்படுதுகிறது.

சரும அலர்ஜிகள்!
மேலும், டியோடரண்ட், பர்ஃப்யூம்களில் கலக்கப்படும் கெமிக்கல்கள் மற்றும் ஆல்கஹால் சரும அலர்ஜிகள் உண்டாகவும், சருமம் கருப்பாகவும் காரணியாக அமைகின்றன.

இதனால் எரிச்சல், அரிப்பு போன்றவை அதிகரிக்கிறது. பூச்சிக்கொல்லி கெமிக்கல் கலப்பு அதிகம் இருக்கும் டியோடரண்ட், பர்ஃப்யூம்கள் தான் அக்குள் சருமம் கருப்பாக காரணியாக இருக்கின்றன.

தலைவலி!
டியோடரண்ட், பர்ஃப்யூம் இருக்கும் அபாயமான கெமிக்கல் கலப்பு தலைவலி, ஒற்றை தலைவலி, சைனஸ் பிரச்சனைகள் போன்றவை உண்டாக பெரும் காரணியாக திகழ்கிறது. அதன் ஸ்ட்ராங்கான நறுமணம் மற்றும் வாசனைக்காக சேர்க்கப்படும் திரவியங்கள் தான் தலைவலியை அதிகப்படுத்துகின்றன.

ஆஸ்துமா!
யார் எல்லாம் அதிகமாக டியோடரண்ட், பர்ஃப்யூம் பயனப்டுத்துகிரார்களோ, அவர்களக்கு நாள்பட சுவாச கோளாறுகள் குறிப்பாக ஆஸ்துமா பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் குமட்டல் மற்றும் சுவாவ மண்டல பிரச்சனைகள் அதிகரிக்கின்றன

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article100 வயது வரை வாழ வைக்கும் இஞ்சி, சுக்கு, கடுக்காய் எப்படி தெரியுமா ?
Next articleஇப்படி சாப்பிட்ட உலர் திராட்சை பல நோய்களுக்கு நல்ல பலன் தரும்!