உங்க எடை சும்மா விறுவிறுனு குறையனுமா! பரம்பரை குண்டா நீங்க! இந்த ஒரு சீக்ரெட்ட தெரிஞ்சுக்கோங்க!

0

வாழ்வின் எந்த ஒரு நிலையிலும் உடல் எடை அதிகரித்து உடல் பருமன் ஏற்படுவது என்பது ஆரோக்கியத்தின் அறிகுறியாக இருப்பதில்லை.

ஆரோக்கியம் மற்றும் அழகு தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு உடல் பருமன் வழி வகுக்கிறது.

அதிக அளவு கலோரிகள் எடுத்துக் கொள்வது மற்றும் தொடர்ச்சியாக சாப்பிடுவது போன்றவை உடல் பருமனுக்கான அடிப்படைக் காரணங்களாகும். உடலில் தேவைக்கு அதிகமான கொழுப்பு சேமிக்கப்பட்டு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு உடல் பருமனைத் தோற்றுவிக்கிறது.

கலோரி உட்கொள்ளும் அளவிற்கும், கலோரி எரிக்கப்படும் அளவிற்கும் இடையிலான சமநிலை என்பது ஒரு சிக்கலான பிரச்சனை ஆகும். ஆனால் அதுவே உடல் பருமனுக்கான முதல் காரணமும் ஆகும்.

ஒரு மனிதனின் மரபணு மற்றும் பாரம்பரியமும் உடல் பருமனுக்கு ஒரு காரணமாக இருக்க முடியும். ஆனால் அதன் அளவுகோல் மிகவும் குறைவானது. ஆனால் மரபணு மட்டுமே உடல் பருமனுக்கான காரணம் என்பது ஒத்துக் கொள்ள முடியாது.

அதே நேரம், ஒரு மனிதனின் எடை அதிகரிப்பிற்கான அபாயத்தை உயர்த்தும் ஒரு காரணியாக இந்த மரபணு உள்ளது என்பதும் மறுப்பதற்கில்லை.

உடல் பருமனை ஊக்குவிக்கும் சுற்றுப்புற காரணிகளான ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம், வழக்கத்திற்கு மாறான வாழ்க்கை முறை, உடற்பயிற்சி குறைபாடு போன்றவற்றுடன் மரபணுவும் ஒரு காரணமாகத் திகழ்கிறது.

பரம்பரை உடல்பருமன்

பாரம்பரியத்திற்கும் உடல்பருமனுக்கும் நேரடி தொடர்பு எதுவும் இல்லை என்று பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஒரே விதமாக உணவு கொடுத்து வளர்க்கப்பட்டாலும், அவர்களின் உடல் எடை வெவ்வேறாக இருக்கும்.

ஒரு குடும்பத்தில் உடல் பருமன் அதிகரித்து காணப்படும் நேரத்தில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த மனிதர்கள் உடல்பருமனைத் தடுத்து, கட்டுக்கோப்பான உடலைப் பெறுவதை குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

இதில் எடை குறைவது மட்டும் நோக்கமல்ல. கடும் பயிற்சியுடன் உடலின் தேவையற்ற கொழுப்பை நீக்கி, ஆற்றல் மற்றும் தன்னம்பிக்கையுடன் ஆரோக்கியமான வாழ்வை வாழ வேண்டும் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்.

உடற்பயிற்சி

சில வழக்குகளில் மரபணு, சரும நிலையை தாக்கும் அபாயம் ஏற்படுகிறது. ஆனால் உடல் பருமன் என்பது அதிகரித்த கொழுப்பு அளவு உடல் பகுதியில் சேமிக்கப்படுவதாகும்.

சிலர் அளவுக்கு அதிகமாக சேரும் கொழுப்பை உடற்பயிற்சி மூலம் குறைக்க நினைத்து கடுமையான பயிற்சியை மேற்கொள்கின்றனர். ஆனால் சிலருக்கு தங்கள் உடலுக்குள் சேமிக்கப்படும் கொழுப்பைப் போக்கும் திறன் இல்லாமல் போகிறது.

இந்த வகை வழக்குகளில் பாரம்பரிய காரணிகள் கணக்கில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

எடை அதிகரிக்க காரணம்?

ஒரு நபரின் உடல் எடை அதிகரிக்க பல காரணங்கள் உண்டு. அவற்றுள் சிலவற்றை இப்போது காணலாம். . அதிக கலோரிகள் உட்கொள்ளும் நபர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் சாத்தியக் கூறுகள் உண்டு.

எந்த நேரமும் ஒரு வேலையும் செய்யாமல் அமர்ந்து கொண்டே இருப்பதால், அல்லது மிகக் குறைவான உடல் செயல்பாடுகள் செய்வதால் உடல் பருமன் உண்டாகும் வாய்ப்பு உள்ளது. . உடல் பருமனுக்கும் பாரம்பரியத்திற்கும் ஓரளவு தொடர்பு உண்டு.

உங்கள் குடும்பத்தில் யாராவது உடல் பருமனுடன் இருக்கும்போது, உங்களுக்கு உடல் பருமன் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

சமூக பொருளாதார நிலை, கலாச்சார பிரச்சனைகள் போன்ற சுற்றுப்புற காரணிகளும் உடல் பருமனை ஒரு சிலருக்கு உண்டாக்கலாம்.

பரம்பரைக் காரணமாக 30-60 சதம் மக்கள் உடல் பருமன் அடைகின்றனர் என்று ஒரு ஆய்வின் முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

எப்படி சாப்பிட வேண்டும்?

ஒரு நாளில் மூன்று வேளை உண்ணுவதை முறையாகக் கொள்ள வேண்டும். மூன்று முறை சாப்பிடும் உணவு சமச்சீரான உணவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதால், உங்கள் உடலில் எல்லா மண்டலமும் அதற்கேற்ற விதத்தில் சீராக இயங்கப் பயிற்றுவிக்கப்படும்.

எந்த வேளை உணவையும் தவிர்க்க வேண்டாம். குறிப்பாக காலை உணவை தவிர்க்க வேண்டாம்.

இப்படி காலை உணவைத் தவிர்ப்பதால், நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கும் சூழல் ஏற்பட்டு, அடுத்த வேளை உண்ணும்போது அதன் அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உண்டாகிறது.

மூன்று வேளை உணவு அருந்துவதை வழக்கமாக்கிக் கொள்ளாமல் இடைப்பட்ட வேளைகளில் சிற்றுண்டி எடுத்துக் கொள்வதால் பசி குறைந்து உடலுக்கு தீங்கு ஏற்படுகிறது.

இரவு உணவு
  • இரவு நேர உணவை மிகக் குறைவாக எடுத்துக் கொள்வது நல்லது. காரணம், இரவு உறங்கும் நேரத்தில் கலோரிகள் குறைவாக எரிக்கப்படுகின்றன.
  • இரவு நேரத்தில் மிக அதிகமாக உணவு உட்கொள்ளும்போது, உடலின் தேவைக்கேற்ற கலோரிகள் மட்டும் எரிக்கப்பட்டு, மீதம் உள்ளவை கொழுப்பாக சேமித்து வைக்கப்படுகின்றன.
  • இரவு உறங்கச் செல்வதற்கு மூன்று மணி நேரம் முன்னதாக உணவு எடுத்துக் கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.
கலோரிகள்
  1. முக்கியம் உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் இனிப்பு உணவுகள் மற்றும் கொழுப்பு உள்ள இறைச்சி சாப்பிடுவதைக் கைவிட வேண்டும்.
  2. எண்ணெய்யில் பொரித்த உணவுகள் மற்றும் உயர் கலோரி கொண்ட உணவுகளான அரிசி, ஸ்பகடி, இறைச்சி சாஸ் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.
  3. உயர் கலோரி உணவுகளைத் தவிர்ப்பதைக் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும். உங்கள் விருப்பமான உணவை தேர்ந்தெடுத்து உண்ணுவதில் தவறு ஒன்றும் இல்லை.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமொட்டை மண்டையில கூட முடி வளர வைக்கணுமா! இந்த இரண்டு பொருளையும் தேய்ங்க! கிடு கிடுனு வளரும்
Next articleதினமும் சிறிதளவு திராட்சை சாறு! ஏராளமான அதிசயத்தை உணரலாம்!