பப்பாளி ஜூஸில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள்!

0

வருடம் முழுவதும் விலை மலிவில் கிடைக்கும் ஓர் பழம் தான் பப்பாளி. விலை மலிவில் கிடைப்பதால் தான் என்னவோ பலருக்கும் இந்த பழத்தைப் பிடிப்பதில்லை போலும். ஆனால், என்ன தான் விலை குறைவில் கிடைத்தாலும், பப்பாளியில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.

இந்த பழத்தை ஒருவர் அன்றாடம் தங்களது டயட்டில் சேர்த்து வந்தால், எண்ணற்ற நன்மைகளைப் பெறலாம். அதிலும் பப்பாளியை ஜூஸ் செய்து, அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து பருகி வந்தால், உடலினுள் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

ஏனெனில் இந்த கலவை உடலின் பல்வேறு உறுப்புக்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுக்கும். சரி, இப்போது அந்த ஜூஸை எப்படி செய்வதென்றும், எப்போது பருக வேண்டுமென்றும், என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் காண்போம்.

இதய நோய்கள் தடுக்கப்படும்

பப்பாளி மற்றும் எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, பி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்கள், பெருந்தமனி தடிப்பு போன்றவை வராமல் தடுக்கும்.

நோயெதிர்ப்பு சக்தி மேம்படும்

பப்பாளி மற்றும் எலுமிச்சை கலவையில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஃபோலேட், பொட்டாசியம் போன்றவை அதிகம் உள்ளது. இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்த தேவையானவை. ஆகவே இந்த கலவையை தினமும் ஒருவர் பருகி வந்தால், நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறும்.

செரிமானம் சீராகும்

பப்பாளி எலமிச்சை கலவையில் உள்ள பீட்டா-கரோட்டீன்கள், வைட்டமின்கள், குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் உற்பத்தியை அதிகரித்து, அசிடிட்டியைக் குறைத்து, செரிமான செயல்பாட்டை சீராக்கும்.

புற்றுநோய் தடுக்கப்படும்

பப்பாளி மற்றும் எலுமிச்சையில் உள்ள உட்பொருட்கள் ஒரு குறிப்பிட்ட புற்றுநோய்களான குடல், புரோஸ்டேட், இரத்தம் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுத்து, உடலை சுத்தம் செய்து, அசாதாரண செல்களின் பெருக்கத்தையும், வளர்ச்சியையும் தடுக்கும்.

ஆர்த்ரிடிஸ்

பப்பாளி மற்றும் எலுமிச்சை கலவையை உடலினுள் உட்செலுத்தும் போது, அதில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சித் தன்மை, இரத்த ஓட்டத்தை அதிகரித்து, வீக்கத்தைக் குறைக்கும். மேலும் இது மூட்டு வலி, தலை வலி மற்றும் ஆர்த்ரிடிஸ் போன்றவற்றிற்கும் சிகிச்சை அளிக்கும்.

பார்வை கோளாறு

இந்த கலவையில் வைட்டமின் ஏ, சி போன்றவை ஏராளமாக உள்ளதால், இது பார்வை நரம்புகளுக்கு ஊட்டமளித்து, கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும். ஆகவே உங்களுக்கு எந்த பார்வை கோளாறும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், இந்த கலவையை தினமும் பருகி வாருங்கள்.

மன அழுத்தம் குறையும்

பப்பாளி, எலுமிச்சை கலவையில் உள்ள வளமான வைட்டமின் சி, மன அழுத்த ஹார்மோன்களின் உற்பத்தியைக் குறைத்து, மன அழுத்தத்தில் இருந்து விடுபடச் செய்யும்.

ஜூஸ் செய்யும் முறை

சிறிது பப்பாளி பழத்தை அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு டம்ளரில் 3 டேபிள் ஸ்பூன் பப்பாளி ஜூஸையும், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினையும் ஒன்றாக சேர்த்து கலந்து பருக வேண்டும்.

எப்போது பருக வேண்டும்?

இந்த ஆரோக்கியமான ஜூஸை தினமும் காலையில் எழுந்ததும், உணவு உண்பதற்கு 1 மணிநேரத்திற்கு முன் வெறும் வயிற்றில் பருக வேண்டும். இப்படி தினமும் பருகி வந்தால், உடலில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நீங்கள் நன்கு உணர்வீர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉங்கள் நட்சத்திரத்திற்கு எந்த தெய்வங்களை வழிபட்டால் அதிஸ்டம் கிடைக்கும் எனத் தெரியுமா!
Next article5 கிலோ எடையை மூன்று நாட்களில் குறைக்க உதவும் அற்புத டீ பற்றி தெரியுமா!