பனங்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதிக பலன் பெறலாம்?

0

பனங்கிழங்கு என்பது மரத்தில் விளைவது அல்ல. மரத்தின் அடியில் விளைவதும் அல்ல, பனை மரத்தில் இருந்து கிடைக்கும் முற்றிய நுங்குகளை மண்ணில் புதைத்து விட்டால், அது சில நாட்களில் முளை விட்டு பனை மரமாக வளரும். அப்படி முளைவிட்ட உடனே அதை தோண்டி பார்க்கும்போது. அதில் நீண்ட குச்சி போன்று இருக்கும். அதுவே பனங்கிழங்கு ஆகும்.

பனங்கிழங்கு எப்படி சாப்பிடலாம்?

பனங்கிழங்கின் தோலை உரித்து வேகவைத்து, அதன் நடுவில் காணும் தும்பு எனும் நரம்பு மற்றும் நாரை நீக்கி வீட்டு சாப்பிடலாம், பனங்கிழங்கை வேகவைக்காமல் வெயிலில் காயவைத்து, அரைத்து, அந்த மாவில் கூழ், தோசை, அல்லது உப்புமா செய்து கூட சாப்பிட்டு வரலாம்.

பனங்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?

நார்ச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சினைகள் குணமாகும்.

உடல் இளைத்தவர்கள் பனங்கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும்.

உடலுக்கு குளிர்ச்சித் தன்மை மற்றும் உடலின் வலிமையும் அதிகரிக்கிறது.

பனங்கிழங்கை மஞ்சளுடன் சேர்த்து வேகவைத்து, வெயிலில் காயவைத்து, பின் அதை, அரைத்து கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து கிடைக்கும்.

பனங்கிழங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் கர்ப்பப்பை மற்றும் உடல் உள் உறுப்புகள் வலிமைபெறும்.

சர்க்கரை நோய், வயறு, மற்றும், சிறுநீர் பாதிப்பு பிரச்சினை உள்ளவர்கள், பனங்கிழங்கு மாவை உணவில் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

பனங்கிழங்கை அரைத்து மாவு செய்து அதில் கஞ்சி அல்லது கூழ் செய்து காலையில் சாப்பிட்டு வந்தால், பசி நீங்குவதுடன் உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபாட்டியின் சில‌ அழகு குறிப்புகள்!
Next article16 செல்வங்களும் அவற்றை பெறும் வழிகள்!