படுத்தவுடன் தூக்கம் வர சில எளிய வழிகள்!

0

ஒவ்வொரு ஆரோக்கியமான மனித உடலுக்கு 7-8 மணி நேரம் தூங்குவது அவசியம். இந்த நேரத்தின் அளவு வயதிற்கு ஏற்றபடி மாற்றம் பெறும். சிறு குழந்தைகள் 12-14 மணி நேரம் தூங்கினால் உடல் வளர்ச்சியடையும். ஆழ்ந்த தூக்கம் என்பது உடல் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது .

தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதற்கான காரணங்கள்: 1.உடல் வலி 2.கவலை மற்றும் பதற்றம் 3. இரவில் அதிகம் வியர்வை 4. மனஅழுத்தம் இரவில் நீண்ட நேரம் டிவி, கம்ப்யூட்டர் பார்ப்பது சிறந்த முறையில் தூக்கம் வருவதற்கு சில குறிப்புகளை இப்போது பார்க்கலாம்:

* படுக்கையறையை முடிந்தவரை இருட்டறையாக வைத்துக்கொள்ள வேண்டும். மிகக்குறைவான வெளிச்சம் தரும் விளக்குகள் பயன்படுத்துவது சிறந்தது.

*செல்பேசிகள், மடிக்கணினிகள் ஆகியவற்றை பிற அறைகளில் வைக்க வேண்டும். மேலும் அலாரம் வைப்பதற்கு பிரத்யேக கடிகாரங்களை பயன்படுத்துவதன் மூலம் உங்களது படுக்கைக்கு அருகே மொபைலின் தேவையை தவிர்க்கமுடியும்.

*படுக்கையறையை குளிர்ச்சியாக வைத்திருப்பது நல்லது.

*புத்தகம் படிப்பது, ரேடியோ அல்லது மனதிற்கினிய இசை கேட்பது, குளிப்பது ஆகியவை மனதை தூக்கத்துக்கு தயார்படுத்தவும் உதவும்.

*தினமும் குறிப்பிட்ட அளவு காலை நேர சூரிய வெளிச்சம் உடலுக்கு கிடைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிகாலையில் சூரிய வெளிச்சம் உடலில் படுமாறு ஓடுவது நடப்பது போன்றவை நமக்கு மாலை வேளையில் எளிதில் தூக்க உணர்வு வர உதவும்.

*இரவு உணவை குறிப்பிட்ட நேரத்துக்கு முடிப்பது, அதாவது படுக்கைக்குச் செல்லும் சில மணி நேரங்களுக்கு முன் முடித்துவிடுவது போன்றவை இரவுத்தூக்கத்தை மேம்படுத்தும்.

*மருதாணிப் பூக்களை தலையணையின் அடியில் வைத்துத் தூங்கினால் நன்றாகத் தூக்கம் வரும்

*மணலிக் கீரையை உலர்த்திப் பொடியாக்கி தினமும் காலை, மாலை 2 வேளையும் சாப்பிட்டால் டென்ஷன் குறைந்து நன்றாக துாங்கலாம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநிரந்தரமாக முகம் வெள்ளையாக மாற தினமும் இந்த கிரீம் தடவுங்க!
Next articleதாம்(பத்திய) உறவை மேம்படுத்த வேண்டுமா இந்த மூலிகையை இப்படி செய்து சாப்பிடுங்கள்!