முன் ஜென்ம பாவங்களை போக்க என்ன தானம் செய்ய வேண்டும் தெரியுமா?

0

முன் ஜென்ம பாவங்களை போக்க என்ன தானம் செய்ய வேண்டும் தெரியுமா?

தானம் என்பது நம் வாழ்க்கையில் அனைவரும் செய்ய வேண்டிய ஒரு சிறந்த காரியம் என ஆன்றோர்களின் கூற்று. நாம் செய்யும் சில தானங்களால் நம் பூர்வ ஜென்ம பாவங்கள் நிவர்த்தி அடையும். அப்படிப் பட்ட தானங்களை இங்கு பார்ப்போம்.

நெய் தானம் :

உடலில் தீராத நோய்கள் மற்றும் ஜாதகத்தில் பாவ திசை நடப்பவர்கள் சுத்தமான நெய்யை தானம் செய்யலாம். இதன் மூலம் அவர்களின் ஜாதக கிரகங்கள் சாந்தம் அடையும்.

அரிசி தானம் :

பூர்வ ஜென்மத்தில் ஒருவர் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் விலக, பசியால் வாடுவோருக்கு, ஏழை எளியவர்களுக்கு அரிசியை தானமாக அளிப்பது நல்லது.

ஆடைகள் தானம் :

ஒருவர் நோய் நொடியின்றி வாழவும், தன் குழந்தைகளுக்கு பிரச்னை வராமல் இருக்கவும் ஆடைகள் தானம் செய்வது சிறந்த பரிகாரமாகும்.ஆடைகள் தானம் செய்வதன் மூலம் பெண்களிடம் நல்லுறவு, சுப யோக பாக்ய விருத்தி, உடல் வலிமை ஆகியவை உண்டாகும். இந்த தானம் பிறந்த நட்சத்திர தினத்தில் செய்வதால் கூடுதல் பலன் உண்டாகும்.

தீப தானம்:

கண் பிரச்னை, கோளாறு இருப்பவர்கள், பெளர்ணமி நாளன்று அம்மன் கோயிலில் 10 நெய் தீபங்களை ஏற்றுவது மிக சிறந்த விஷயம்.அதே போல மின் வசதி இல்லாத ஏழை வீட்டிற்கோ அல்லது கோவிலுக்கோ மின் வசதி செய்து கொடுப்பதன் மூலம் பார்வை பளிச்சென்று இருக்கும்.

தேன் தானம்:

நீண்ட நாட்களாக புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், கர்பப் பை பிரச்னை உள்ளவர்கள், தாரா பலன் உள்ள நட்சத்திர தினத்தன்று, வெண்கல கிண்ணத்ஹ்டில் சுத்தமான தேனை அளிப்பது சிறந்தது. விரவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்களின் தாலியை கட்டாயப்படுத்தி கழற்றி தேர்வு எழுத வைத்த‌ அதிகாரிகள்!
Next articleதீயாய் பரவும் காணொளி! குழந்தையை அடித்து துன்புறுத்தும் காப்பாளர்!