நேரத்திற்கு வரலையா மாதவிலக்கு? இந்த சூப்பை குடிங்க!

0

மாதவிடாய் என்பது ஒரு பூப்படைந்த பெண்ணின் உடலில், மாதந்தோறும் சுழற்சி முறையில் நிகழும் ஒரு உடலியங்கியல் மாற்றமாகும்.

இது சில பெண்களுக்கு அதிக கவலை, டென்ஷன், போன்ற மனநிலைகளில் இருப்பதாலும், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நேரத்திற்கு சரியாக வருவதில்லை.

இதற்காக கடைகளில் விற்கப்படும் மருந்துகளை பயன்படுத்தமால் வீட்டு வைத்தியங்களை இயற்கை முறையில் கையாளுவோம்.

தேவையானவை
மணத்தக்காளிக் கீரை – 1 கைப்பிடி
கொத்தமல்லி விதை – 1 ஸ்பூன்
சீரகம் – 1ஸ்பூன்
சோம்பு – 1 ஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
பூண்டு – 4 பல்
சின்ன வெங்காயம் – 3
வெற்றிலை – 2
மிளகு – அரை ஸ்பூன்
இவைகளை எடுத்து தண்ணீர் வீட்டு நன்றாக சூப் பதத்திற்கு செய்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளுங்கள்.

பின் இந்த சூப்பை 3 மாதத்திற்கு தொடர்ந்து காலையிலும் மாலையிலும் சாப்பாட்டிற்கு முன்பும் பின்னும் குடித்து வந்தால் மாதவிலக்கு பிரச்சனை நீங்கும்.

அது மட்டுமின்றி இந்த சூப்பை சாதாரண நாட்களிள் கூட பெண்கள் சாப்பிடலாம். இது உடம்பிற்கு நல்ல ஆரோக்கியத்தை தருகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும் பதநீர்!!
Next articleசீரான மாதவிலக்கு இந்த உணவுகளை சாப்பிடுங்கள் !11