நெதர்லாந்து தாக்குதல்தாரி யார்! பொலிஸாரின் தகவலையறிந்து ஆத்திரம் கொண்ட தாக்குதல்தாரியின் தந்தை!

0

நெதர்லாந்து உட்ரெக்ட் (Utrecht) நகரில் நேற்று காலை ட்ராம் ஒன்றினுள் துப்பாக்கிச்சூடு நடத்திய புகைப்படம் மற்றும் நடத்தியவர் தொடர்பான விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

நேற்று காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இதுவரை மூவர் உயிரிழந்துள்ளதாகவும் 9 பேர் காயமடைந்துள்ளதாகவும் நகர மேயர் உறுதிப்படுத்தியுள்ளார்.

துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் துருக்கியை சேர்ந்த 37 வயதான கொக்மென் டானிஸ் (Gokmen Tanis) என பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.

தாக்குதல்தாரி தொடர்பில் பொலிஸார் தகவல் வெளியிட்டதும் கைது செய்யப்பட்ட கொக்மெனின் தந்தை, என் மகன் தவறு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டால், அவனுக்கு கடும் தண்டனை கொடுங்கள் என ஆவேசமாக பேசியிருக்கிறார்.

மேலும் எக்காரணம் கொண்டும் துப்பாக்கிதாரியை அணுகவேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த தக்குதல் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில்,

குறித்த தாக்குதல் முடிந்த சில நிமிடங்களில் தாக்குதல்தாரி ஒரு ரெனால்ட் க்ளோயை கடத்த முயன்றதாக அறிந்த பொலிஸார் அந்த காரை தேடும் முயற்சியில் இறங்கியதாகவும், பின்னர் அந்த கார் புறநகர்ப்பகுதியில் 1 மணிநேரத்திற்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் அவர் எப்படி, எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார் என்பது குறித்து தகவலை பொலிஸார் வெளியிடவில்லை. மேலும் இந்த தாக்குதலுக்கும், பயங்கரவாதிகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்கிற கோணத்தில் பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகூட்டத்தை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பெண் அரங்கேற்றும் அசிங்கம்! திருத்தவே முடியாது இவங்களை!
Next articleஎன் வாழ்க்கையைப் பாழாக்கிட்டீயே! கதறும் பெண்! மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய பொள்ளாச்சி ஆடியோ!