நெஞ்சக சளியை கரைக்கும் கருஞ்சீரகத்தின் பல்வேறு நன்மைகள்!

0

நெஞ்சக சளியை கரைக்கும் கருஞ்சீரகத்தின் பல்வேறு நன்மைகள்!

நெஞ்சக சளியை கரைக்கும் கருஞ்சீரகத்தின் பல்வேறு நன்மைகள்

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், வீட்டில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், புற்றுநோயை தடுக்க கூடியதும், நெஞ்சக சளியை கரைக்கும் தன்மை உடையதும், தோல்நோய்களை குணப்படுத்த கூடியதுமான கருஞ்சீரகத்தின் மருத்துவ குணங்கள் குறித்து பார்க்கலாம்.

பல்வேறு நன்மைகளை கொண்ட கருஞ்சீரகம், சிறுநீரை தாராளமாக வெளித்தள்ள கூடியது. மாதவிலக்கை தூண்டும் தன்மை உடையது. இளம்தாய்மார்களுக்கு பால் சுரக்க செய்யும் மருந்தாகிறது. இதய அடைப்பை சரிசெய்ய கூடியது. மூளையில் ஏற்பட்ட கட்டியை கரைக்கும். நுரையீரல், குடல், மார்பகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. வாயுவை வெளித்தள்ளுகிறது. வலிப்பை போக்கும் மருந்தாக விளங்குகிறது.

கருஞ்சீரகத்தை பயன்படுத்தி நரம்புகளை பலப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கருஞ்சீரகம், தேன்.

செய்முறை:
கருஞ்சீரகத்தை லேசாக வறுத்து பொடி செய்து கால் ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும். இதனுடன் அரை ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து உணவுக்கு முன்பு சாப்பிட்டுவர நரம்பு பலப்படும். சளி, காய்ச்சல், இருமல், தொண்டைக்கட்டு, ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் தீரும். நெஞ்சக சளியை கரைத்து வெளியேற்றும்.

கருஞ்சீரகத்தை பயன்படுத்தி விக்கலுக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கருஞ்சீரகம், மோர், உப்பு.

செய்முறை
ஒரு டம்ளர் அளவுக்கு மோர் எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் கருஞ்சீரகப் பொடி, உப்பு சேர்த்து குடித்தால் விக்கல் சரியாகும். ரத்த ஓட்டம் தூண்டப்படும். வாயு வெளியேறும்.

கருஞ்சீரகத்தை கொண்டு தோல் நோய்களுக்கான தைலம் தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய், கருஞ்சீரகம்.

செய்முறை
ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றவும். இதனுடன் கருஞ்சீரகப் பொடி சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சி எடுக்கவும். இதை பூசிவர கரப்பான் நோயினால் ஏற்படும் புண்கள், அரிப்பு போன்ற பிரச்னைகள் சரியாகும். சொரி, சிரங்கு, படை என எந்தவகை தோல்நோய்களாக இருந்தாலும் குணமாகும். பூஞ்சை காளான்கள், நுண்கிருமிகளை போக்கும். உள் உறுப்புகளை தூண்டும்.

கருஞ்சீரகத்தை பயன்படுத்தி குறட்டை, நெஞ்சக சளிக்கான மருந்து தயாரிக்கலாம்.
தேவையான பொருட்கள்:
கருஞ்சீரகம், தும்பை இலை.

செய்முறை:
அரை ஸ்பூன் கருஞ்சீரகம், ஒருபிடி தும்பை இலையுடன் ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி இரவு தூங்கபோகும் முன்பு குடித்துவர நெஞ்சக சளி கரைந்து வெளியேறும். மூச்சுத்திணறலை சரிசெய்கிறது. குறட்டை பிரச்னை நீங்கும்.

கருஞ்சீரகம் சர்க்கரை நோயாளிகளுக்கு அற்புதமான மருந்தாகிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் தன்மை உடையது. தினமும் அரை ஸ்பூன் அளவுக்கு கருஞ்சீரகம் சாப்பிட்டுவர சர்க்கரையின் அளவு குறையும். கருஞ்சீரகம் ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டியது அவசியம்.

தலைக்கு குளிக்கும்போது தலைவலி, கழுத்துவலி ஏற்படும். இதற்கான மருத்துவம் குறித்து பார்க்கலாம். தலையில் நீரேற்றம் ஏற்படுவதால் இப்பிரச்னைகள் ஏற்படுகிறது. மருதாணி விதைகளை பொடித்து சாம்பிராணியுடன் சேர்த்து புகைக்க செய்வதன் மூலம் கழுத்துவலி, தலைவலி சரியாகும். இது, கொசு, பூச்சிகளை விரட்டும் மருந்தாக விளங்குகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுதுமைத் தோற்றத்தைத் தள்ளிப் போட பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் எண்ணற்ற நன்மைகள்!
Next articleஇன்று கடக ராசிக்காரர்களுக்கு மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும்!