நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்றீங்களா? ஆபத்து ! இதை கட்டாயம் படியுங்கள்!

0

கணிணி முன்பாக, நீண்ட நேரம் நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய்றீங்களா, அப்படி இருப்பது ரெம்பவே ஆபத்து என்கிறார்கள் மருத்துவர்கள்.நீண்ட நேரம் நாற்காலியில் அமர்ந்து இருப்பதால் கால்களில் கால்களிலேயே ரத்தம் தங்கிவிடுவதால். மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறைந்து போய் விடும்.

இதனால் ரத்தம் கட்டியாக வாய்ப்பு ஏற்படும் என்றதால், ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படுவதுடன், பக்கவாதமும் வராம் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பதால், கால்களின் முட்டி எலும்பு வலுவிழந்து, மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.உடல் உழைப்பு இல்லாமல், உடற்பயிற்சியும் இல்லாமல், ஒரு அறைக்குள் ஏசியின் கீழ் நீண்ட நேரம் பணியாற்றினால் உடல் பருமன் அதிகரிக்கும். இதன் காரணமாக சர்க்கரை வியாதியும் வரும் வாய்ப்பு உள்ளது.

அதுமட்டும் இன்றி, முதுகு வலி, இடுப்பு வலி , சிறுநீர கல் உள்ளிட்டவை ஏற்படும் ஆபத்தும் இருக்கிறது.எனவே நாற்காலியில் நீண்ட நேரம் அமர்வதை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

அலுவலகத்தில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை இருக்கையைவிட்டு எழுந்து 5 நிமிடம் நடக்கலாம்.

சூரிய ஒளி கிடைக்கும் பகுதியில் இருந்தால் அங்கு சென்று சிறிது நேரம் சூரிய ஒளி படும்படி ரிலாக்ஸ் ஆகலாம்.அமர்ந்திருக்கும் நாற்காலியை சரியாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியமான ஒன்று. அது, முதுகுத்தண்டுக்குச் சரியாகப் பொருந்தும் அளவுக்குச் சரியான உயரத்தில் இருக்க வேண்டும்.

சாப்பிட்ட பிறகுல் உடனே நாற்காலியில் அமர்ந்து வேலை செய்யக் கூடாது. சில நிமிடங்கள் நிற்கலாம் அல்லது நடக்கலாம்.அலுவலகங்களில் லிஃப்டுக்குப் பதிலாகப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம்.அடிக்கடி எழுந்து சென்று தண்ணீர் அருந்துங்கள்: இதன் மூலம் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறும் . உடலும் வெப்பம் ஆகாமல் தடுக்கலாம். கால்களுக்கும் வேலை கொடுப்பது போல் இருக்கும்.

காய்கறி வாங்க, மளிகை பொருட்கள் வாங்க என , சிறிய அளவிலான தூரங்களுக்கு கூட தினசரி இருசக்கர வாகனத்தில் செல்பவர்களாக இருந்தால், அந்த பழக்கத்தை மாற்றுங்கள். கிடைக்கும் சமயத்தில் எல்லாம் நடந்து செல்லுங்கள் அது உங்கள் ஆராக்கியத்தை மேம்படுத்தும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த இடத்தில் சில நிமிடம் மட்டும் விரலால் அழுத்துங்கள் பின் நடக்கும் அதிஷயத்தை நீங்களே பாருங்கள்!
Next articleசிறுநீரகத்திலுள்ள நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவும் அற்புதமான பானம்!