முழு தானியங்கள் என்பவை கோதுமை மக்காச் சோளம், கம்பு, கேழ்வரகு, ஓட்ஸ் போன்றவற்றை குறிக்கும். அந்த காலங்களில் 100 வயது வரை வாழ்ந்த பெரியவர்கள் சொல்லும் உணவு ரகசியங்கள் இந்த முழு தானிய வகைகள்தான். இவற்றில் புரொட்டின், நார்சத்து, விட்டமின் பி, ஆன்டி ஆக்ஸிடென்ட், தாதுக்கள் என சகல சத்துக்களும் உள்ளன.
இந்த முழுதானியங்கள் உண்டால் இளம் வயதில் வரும் மரணங்களை தவிர்க்கலாம் என ஹார்வார்ட் பல்கலைக்கழகம் கூறியுள்ளது. இவற்றில் உள்ள பயோ ஆக்டிவ் மூலக்கூறுகள் உடலுக்கு நிறைய நன்மைகள் தருகின்றன. அதிக நார்சத்துக் கொண்டவை. கொழுப்பினை குறைக்கின்றன. இதயத்தை பாதுகாக்கும். அமெரிக்காவில் நடந்த ஆராய்ச்சியில் முழுதானியங்களை 70 கிராம் தொடர்ந்து உண்டவர்களில் 22 சதவீதம் எந்த நோயும் தாக்காத திறனும், 23 சதவீதத்தினருக்கு இதய நோய் ஆபத்தும் இல்லாமலும், 20 சதவீதத்தினருக்கு புற்று நோய் ஆபத்தி இல்லாமலும் இருக்கின்றனர்.
ஆதலால் குறைந்தது 50 கிராம் முழுதானியமாவது உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என ஹார்வார்டு உடல் நலம் சார்ந்த துறை கூறியுள்ளது. சுத்தகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்த்து, முழுதானியங்கள் கட்டாயம் அன்றாடம் எடுத்துக் கொள்ள வேண்டும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்
முழு தானியங்கள் உண்பதால் கல்லீரலுக்கு மிகவும் நன்மைகள் விளைகின்றது. இவை கொழுப்பு உணவுகள் மீது வரும் ஆசையை தடுக்கின்றது. பசியை வெகு நேரம் தாக்குபிடிக்க வைக்கிறது என டெல்லியை சேர்ந்த ஆய்வாளர் அன்ஷுல் ஜெய் பாரத் கூருகின்றார். ஆகவே உங்கள் வீட்டில் முழுதானியங்களை பழக்கப்படுத்துங்கள் மிக முக்கியமாக குழந்தைகளுக்கு கட்டாயம் தினமும் முழு தானியங்கள் கொடுத்து பழக்கப்படுத்த வேண்டும்.
ஓட்ஸ், முழுதானியங்களால் செய்யப்பட்ட சப்பாத்தி, சூப் என எல்லாவற்றிலும் சேர்த்திடுங்கள். கல்லீரலுக்கு நன்மைகள் தரும். இதயத்திற்கு பாதுகாப்பு தரும். சிறு நீரக செயல்களை துரிதபடுத்தும், மூளையை சுறுசுறுப்பாக்கும்.