நீங்கள் சாப்பிடும் உணவு விஷமாக மாறியுள்ளதா? என்பதை கண்டுபிடிக்க 8 வழிகள் இதோ!

0

“கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்” இப்படி கும்மாளமாக பாட வேண்டிய நம்மை “சோதனை மேல் சோதனை” என்று பாட வைத்து விட்டனர். கடந்த சில வாரங்களாக பிராய்லர் மீனை பற்றிய தகவல்களை ஊடகங்கள் வெளிச்சம் போட்டு காட்டி வரும் இந்த வேளையில் நாம் சாப்பிட கூடிய உணவு விஷயமா? இல்லையா? என்பதை கண்டுபிடிக்க சில எளிய வழிகள் உள்ளது.

நம் உடம்பில் ஏற்பட கூடிய ஒரு சில மாற்றங்களை வைத்தே இதை கண்டறிய முடியும். அப்படி விஷத் தன்மையாக மாறி இருந்தால் அதை சரி செய்யவும் சில ஆயுர்வேத வழி முறைகள் உண்டு. உணவு விஷமாக மாறுவதால் அபாயமும் பாதிப்பும் நமக்கு தான் என்பதை மறவாதீர்கள். இனி நாம் உண்ணும் உணவு விஷ தன்மை பெற்றுள்ளதா? இல்லையா? என்பதை தெரிவிக்கும் அறிகுறிகளை கண்டறியலாம்.

பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்கும் உணவுங்களை ஒரு போதும் நாம் நம்பி விட கூடாது. இவற்றில் தான் மொத்த விஷமே அடங்கி இருக்கும். சில உணவுகள் பார்ப்பதற்கு ஏதோ மாதிரி இருக்கும், ஆனால் இவற்றில் இருக்க கூடிய சத்துக்கள் அளவுக்கு அதிகமானவை. எனவே உணவின் தோற்றத்தை வைத்து எப்போதும் எடை போடாதீர்கள்.

நீங்கள் சாப்பிட்ட உணவு விஷ தன்மையானது என்பதை உணர்த்தும் முதல் அறிகுறி இதுதான். ஆம், சாப்பிட்டதும் உடலில் அதிக அளவில் வியர்த்து கொட்டினால் மோசமான நிலையில் நீங்கள் உள்ளீர்கள் என்று அர்த்தம். சிலருக்கு நேற்றோ அல்லது அதற்கு முன் தினமோ சாப்பிட்ட உணவின் விஷ தன்மை கூட இன்னும் வயிற்று பகுதியில் தேங்கி இருக்க வாய்ப்புகள் உள்ளது. இதுவும் மோசமான நிலையை உண்டாக்கி விடும்.

பல நாட்களாக நீங்கள் உண்ண கூடிய உணவு இது போன்ற விஷ தன்மையுள்ளதாக இருந்தால் அதற்கான அறிகுறியை உங்களின் மூளை காட்டி கொடுத்து விடும். உடலில் சோர்வான, தளர்வான நிலையோ அல்லது மந்தமான, குழம்பிய நிலையோ ஏற்பட்டால் உணவு விஷமாக மாறியுள்ளது என்று அர்த்தம்.

பெரும்பாலும் இது வெளிப்படையான ஒரு அறிகுறியாகவே மாறியுள்ளது. விஷமாக மாற கூடிய உணவுகள் உடலில் சென்றதும் இந்த அறிகுறி உங்களுக்கு தென்பட ஆரம்பிக்கும். அதாவது, வயிற்று பகுதியில் வலி ஏற்பட்டு மோசமான அனுபவம் உங்களுக்கு உண்டாகும். சிலருக்கு வயிற்றை இறுக்கமாக பிடித்து வைத்திருப்பது போன்ற உணர்வும் ஏற்படும்.

விஷ தன்மையுள்ள உணவுகளை சாப்பிட்ட சில மணி நேரங்களில் உடலின் தட்பவெப்ப நிலை மாறி விடும். குறிப்பாக உடல் முழுக்க ஜில்லென்று உருவாகும். இப்படிப்பட்ட நிலை கூட உணவு விஷமாக மாறியதற்கான அறிகுறிதான்.

சாப்பிட்ட உணவு பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகளை வைத்து மிக சுலபமாக கண்டறியலாம். இவை முதல் நிலை அறிகுறியாகவே கருதப்படுகிறது. இந்த வகை அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. ஏனெனில், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை தர கூடும்.

விஷ தன்மையுள்ள உணவுகளை நீங்கள் சாப்பிட்டுள்ளீர்கள் என்பதை தலை வலியின் மூலமும் நாம் அறிந்து கொள்ள இயலும். எந்த வித காரணமும் இல்லாமல் தலைவலி வந்தால், நாம் சாப்பிட்ட உணவு கூட இதற்கு மூல காரணமாக இருக்கலாம்.

உணவு விஷ தன்மையுள்ளதாக மாறினால் இந்த அவசர கால அறிகுறியை வைத்து கண்டறியலாம். தொடர்ந்து வயிற்று போக்கு ஏற்பட்டால் அது கூட இதன் அறிகுறியாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. உண்ட உணவு சரியாக செரிமானம் அடையாமல் வயிற்று போக்காக அதன் பாதிப்பை நம்மிடம் காட்டும்.

பசியின்மை, சோர்வு இது போன்ற அறிகுறிகளோடு காய்ச்சல் ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள். இது உணவு விஷமாக மாறியதன் மூல காரணமாக நிச்சயம் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. சில சமயங்களில் வயிற்று பகுதியில் பலவித தொற்றுக்களை உருவாக்கும் தன்மையும் இதற்குண்டு.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிறந்ததேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரியணுமா!
Next article14.02.2019 இன்றைய ராசிப்பலன் – இன்று குடும்பத்தில் திடீர் தனவரவு உண்டாகும் ராசி எது !