நியூசிலாந்து துப்பாக்கிச்சூட்டில் கணவர் கண்முன்னால் கொல்லப்பட்ட கேரள இளம்பெண்! நடந்ததை அதிர்ச்சியுடன் விளக்கிய கணவர்!

0

நியூசிலாந்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் கேரளாவை சேர்ந்த பெண் தனது கணவரின் கண்முன்னால் சுட்டு கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

நியூசிலாந்தின் Christchurch நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 50 பேர் உயிரிழந்தனர்.

இதில் ஒருவர் தான் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த அன்சி அலிபவா (25). அன்சி தனது கணவர் அப்துல் நசீர் உடன் மசூதியில் இருந்தார். அப்போது கணவனும், மனைவியும் வேறு வேறு அறையில் இருந்த நிலையில் அன்சி சுட்டு கொல்லப்பட்டார்.

இந்த தாக்குதலில் நசீர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது குறித்து கேரளாவில் உள்ள தனது உறவினர் நியாஸிடம் நசீர் போன் மூலம் கூறியுள்ளார்.

நியாஸ் கூறுகையில், அன்சி உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்வதை கண்களால் பார்த்துள்ளார் நசீர். அந்த சமயத்தில் மக்கள் அங்குமிங்கும் ஓடி கொண்டிருந்தனர்.

அவரால் மனைவியை காப்பாற்ற முடியவில்லை. நசீர் Christchurch நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார்.

அவரின் மனைவி அன்சி முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.

அன்சியின் மறைவு செய்தி அதிர்ச்சியில் இருந்து அவர் தாய் ரசியா இன்னும் மீளவில்லை. அவரால் பேச கூட முடியவில்லை.

அன்சியின் சடலம் கேரளாவுக்கு வர குறைந்தபட்சம் ஒரு வாரம் ஆகலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர். நசீரின் வருகைக்காக தான் காத்துள்ளோம்.

எனக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடக்கவுள்ளது, இதற்காக அன்சி கேரளாவுக்கு வர திட்டமிட்டிருந்தார்.

ஆனால் அவர் இப்போது உயிரோடு இல்லை என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என நியாஸ் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஹிஜாப் அணிந்து, கிரிஸ்ட்சர்ச் நகர பள்ளிவாசலுக்கு சென்று ஆறுதல் கூறிய நியூசிலாந்து பிரதமர்! குவியும் பாராட்டுக்கள்!
Next articleஉடல் முழுதும் தெரியும்படி கண்ணாடி உடை அணிந்து விருது விழாவுக்கு வந்த நடிகை! முகம்சுளித்த ரசிகர்கள்!