Home thatstamil one india tamil oneindia tamil நான் ஓரின சேர்க்கையாளரின் தோழி! அதிரடியாக கூறிய இளம் நடிகை!

நான் ஓரின சேர்க்கையாளரின் தோழி! அதிரடியாக கூறிய இளம் நடிகை!

0
827

எனக்கு ஓரினசேர்க்கை நண்பர்கள் பலர் இருக்கிறார்கள் என்று இளம் நடிகை ரெஜினா கேசான்ரா தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

எனக்கு ஓரினசேர்க்கை நண்பர்கள் பலர் இருக்கிறார்கள். நாம் அவர்களை புரிந்துகொள்ள வேண்டும்.

பலரும் கலாச்சாரம்-ஒழுக்கம் என கூறி இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். மேலும் பொது இடத்தில் யாராவது நெருக்கமாக இருந்தால் அல்லது கிஸ் செய்தால் அதற்கும் எதிர்ப்பு வருகிறது என்று கூறியுள்ளார்.

இதேவேளை, ரெஜினா கேசான்ரா கடந்த 2005ஆம் ஆண்டு பிரசன்னா நடித்து வெளிவந்த படம் ‘கண்ட நாள் முதல்’ படத்தில் தனது 15 வயதில் அறிமுகம் ஆனவர்.

சில தமிழ் படங்களில் நடித்தாலும் 2013ல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.

தற்போது இந்தி படத்தின் ஒரு ரி மேக்கில் ஓரின சேர்க்கையாளராக நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர். அது மாத்திரமை் இன்றி ஓரின சேர்க்கையாளர் குறித்து இவர் வெளியிட்ட கருத்து ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleபிரபல கால்பந்து வீரருடன் மாயமான விமானம் கண்டுபிடிப்பு! பெரும் கலக்கத்தில் ரசிகர்கள்!
Next articleபேருந்தில் மோசமாக நடந்து கொண்ட முஸ்லிம் பெண்! இறுதியில் நடந்த விபரீதம்!