நான்கே நாளில் பாதவெடிப்பை போக்க வேண்டும்! கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க!

0

பாதங்களில் பாதவெடிப்பு வருவதற்கான முக்கிய காரணம் போதியளவு பராமரிப்பு பாதங்களுக்கு கிடைக்காமல் போவதேயாகும்.

பாதங்கள் வெளியில் அதிகம் தெரிவதால், பாதங்களில் உள்ள ஈரப்பசை குறைந்து, வறட்சியை ஏற்படுத்தி, வெடிப்பை உண்டாக்கி விடுகின்றது.

இதற்காக நம்மில் பலர் நேரத்தை செலவழித்து பியூட்டி பாலர்களுக்கு சென்று பெடிக்யூர் செல்வது வழக்கம். இருப்பினும் இது சில நாட்களுக்கு மட்டுமே பயனை தருகின்றது.

இதற்கு வீட்டில் இருந்த படியே பாத வெடிப்பை சரி செய்வது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
கற்றாழை ஜெல்- 2 டேபிள் ஸ்பூன்

எலுமிச்சை – 1/2

டீ ட்ரி ஆயில்- 1 டீ ஸ்பூன்

உப்பு – 1 டேபிள் ஸ்பூன்

வெதுவெதுப்பான நீர்

ஆப்பிள் சிடார் வினிகர் – 1 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை
ஒரு சிறிய பக்கெட்டில் நிறைய வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு எடுத்து கொள்ளுங்கள்.

இப்பொழுது இந்த நீரில் உங்கள் பாதங்களை வைத்து 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

சில நிமிடங்கள் கழித்து பாதங்களை எடுத்து ஸ்க்ரப் வைத்து நன்றாக தேய்க்க வேண்டும்.

5 நிமிடங்கள் கழித்து சுத்தமான துண்டை கொண்டு பாதங்களை துடைத்து விடுங்கள். இப்படி செய்தால் பாதங்களில் உள்ள இறந்து செல்களை நீக்கி, பாதங்களை மென்மையாக்கும்.

அதுமட்டுமின்றி மற்றொரு பக்கெட்டை எடுத்து பாதங்கள் மூழ்கும் அளவிற்கு அதில் வெதுவெதுப்பான தண்ணீரை நிரப்பி அதில் கொஞ்சம் கற்றாழை ஜெல், எலுமிச்சை சேர்த்து கலக்குங்கள். அத்துடன் டீ ட்ரி ஆயில், ஆப்பிள் சிடார் வினிகர் சேர்த்து கலக்கவும்.

இப்பொழுது இந்த கலவையில் பாதங்களை வைத்து 20-25 நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்யுங்கள். பிறகு ஒரு மென்மையான துண்டை எடுத்து பாதங்களை துடைத்து இறுதியாக மாய்ஸ்சரைசர் க்ரீம் அப்ளே செய்யுங்கள்.

இந்த கற்றாழை மற்றும் எலுமிச்சை நீர் பாதங்களில் உள்ள பாத வெடிப்பை போக்கி பட்டு போன்ற மென்மையான பாதங்களாக மாற்றிவிடுகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதொடையில் அசிங்கமாக காணப்படும் சதையை குறைக்கணுமா! இந்த உடற்பயிற்சியை செய்தாலே போதும்!
Next articleமுகப்பருக்களை தடுக்க வேண்டுமா! வாரத்திற்கு 2 முதல் 3 முறை இதை செய்திடுங்க!