தொடையில் அசிங்கமாக காணப்படும் சதையை குறைக்கணுமா! இந்த உடற்பயிற்சியை செய்தாலே போதும்!

0

பெண்கள் தொப்பைக்கு அடுத்தப்படியாக தொடைப்பகுதியில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கத் தான் பலரும் அவதிப்படுவதுண்டு.

இதற்கு ஜிம்மிற்கு சென்று தான் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்து கூட சில எளிய பயிற்சிகளை மேற்கொள்ள முடியும்.

இதற்கு தினமும் சரியான டயட்டுடன், ஒருசில எளிய உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வந்தாலே போதும்.

அதில் சில எளிய உடற்பயிற்சிகள் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அதனை பார்ப்போம்.

Side Lunges Exercise

இந்த உடற்பயிற்சிகள் தொடையில் உள்ள தசைகளுக்கு நல்லது. தொடையில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்க எடையுடனான லாஞ்சஸ் பயிற்சியை செய்யுங்கள்.

அதிலும் படத்தில் காட்டப்பட்டவாறு ஒரு செட்டிற்கு 10 எண்ணிக்கை என மூன்று செட் செய்து வந்தால், தொடையில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, தொடைத் தசைகள் வடிவமைப்பைப் பெறும்.

Leg Lift

இந்த பயிற்சியும் கால்களுக்கு நல்லது. அதற்கு படத்தில் காட்டப்பட்டவாறு தரையில் படுத்துக் கொண்டு, முதலில் ஒரு காலை மேலே தூக்க வேண்டும்.

பின் அதை இறக்கி, மறுகாலை மேலே தூக்க வேண்டும். இப்படி 10 எண்ணிக்கையில் 3 செட் செய்ய வேண்டும். பின்பு சிறிது இடைவேளை எடுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் மேலே தூக்க வேண்டும். இப்படி 5 எண்ணிக்கையில் 3 செட் செய்ய வேண்டும்.

Fire Hydrants Workout

படத்தில் காட்டப்பட்டவாறு தவழும் குழந்தைப் போன்ற நிலையில் இருந்து, ஒரு காலை பக்கவாட்டில் தூக்கி 30 நொடிகள் கழித்து இறக்க வேண்டும்.

பின் மறுகாலை பக்கவாட்டில் தூக்கி 30 நொடிகள் கழித்து இறக்கவும். இப்படி தினமும் செய்ய தொடையில் உள்ள கொழுப்புக்கள் கரையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசன் டிவி உதவி இல்லாமல் விஜய்யால் இவ்வளவு தூரம் வந்திருக்க முடியாது- ரசிகரின் டுவிட்டிற்கு பிரபலம் மாஸ் பதிலடி!
Next articleநான்கே நாளில் பாதவெடிப்பை போக்க வேண்டும்! கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க!