நாங்க 14 பேரும் அந்த இடத்திற்கு! இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தை அறிந்து கண்ணீர் விட்டு அழுத செய்தி வாசிப்பாளர்!

0

பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக இருந்து வரும் விஜய பாஸ்கர் , குண்டு வெடிப்பு நடந்த இலங்கை தேவாலயத்திற்கு சென்று வந்திருந்ததாக மிகுந்த வேதனையுடனும், கண்ணீருடனும் கூறியுள்ளார்.

தமிழ் செய்தி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் விஜய் பாஸ்கரன் மிகவும் பிரபலம். இந்நிலையில் இவர் சமீபத்தில் தன் குடும்பத்தினருடன் பத்து நாட்களாக எல்லோரா, அஜந்தா என பல சுற்றுலாத் தளங்களுக்கு சென்று வந்துள்ளார்.

அப்போது இவர் மிக முக்கியமான பதிவு ஒன்றை பிரபல தமிழ் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில், நான் பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தி சேனல் ஒன்றில் காது கேளாத வாய்பேசாதவர்களுக்காகச் செய்தி வாசிப்பாளராக இருக்கிறேன்.

நம்மைப் போன்ற மனிதர்கள் தான் காது கேளாத, வாய் பேச முடியாதவர்களும், அவர்கள் நம்மைப் போன்று நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவார்கள்.

நாட்டு, நடப்புகளைத் தெரிந்துகொள்ள ரொம்பவே ஆர்வம் காட்டுவார்கள். அவர்களுக்காகவே பிரத்யேகமாக தொலைக்காட்சியில் உருவாக்கப்பட்டது சைன் லாங்குவேஜ் நியூஸ் ரீடிங்.

என் சகோதரி சந்திராவால்தான் எனக்கு இந்த மொழி கைவசம் வந்தது. அவருக்கு இப்போது எழுபது வயதுக்கும் மேல் ஆகிறது. வீட்டில் அவருடன் பேசிப் பேசி எனக்கு இந்த மொழி நன்றாக வந்துவிட்டது என்று கூறிய அவர், இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு சில நாட்கள் முன்பு தான் நாங்கள் அங்கு சென்றிருந்தோம்.

குறிப்பாக குண்டு வெடிப்பு நடைபெற்ற தேவாலயத்துக்கும் சென்று வந்தோம். இப்படி ஒரு தாக்குதல் நடந்துவிட்டது என்பதைடி.வியில் பார்த்தபோது என் சகோதரி கண்கலங்கி அழுததை என்னால் மறக்கவே முடியாது.

நம்மைப் போன்று சாதாரணமானவர்களைவிட இரண்டு மடங்கு உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் என் சகோதரியைப் போன்றுள்ள மாற்றுத் திறனாளிகள். செய்தியைப் பார்த்ததும், என் சகோதரி சந்திரா, என்னைப் போன்ற பதினான்கு பேரும் அந்த இடத்திற்கு சென்று வந்தோம். இன்னும் சில நாட்கள் தள்ளிச் சென்றிருந்தால் நாம் உயிருடன் இருந்திருக்க முடியாது என்று கண்ணீர் விட்டார்.

அந்த சுற்றுப்பயணத்தின் போது 14 மாற்றுத்திறனாளிகள் இருந்தனர். இலங்கையில் அவர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தனர்.

இலங்கையில் இறங்கியதும், என்னுடன் வந்திருந்த மாற்றுத் திறனாளிகள் உணர்ச்சிவசப்பட்டு, மண்ணைத் தொட்டு கண்ணில் வைத்துக் கொண்டனர்.

முருகர் கோயில் உள்ளிட்டப் பல கோயில்களுக்குப் சென்றிருந்தோம். இலங்கையில் ராமர் வாழ்ந்தது நிஜமா என்பதை அறிந்துகொள்தான் இந்த பயணத்தை ஏற்பாடு செய்தோம்,

ஏற்கெனவே தமிழர்கள் பலரைக் கொன்று குவித்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கிருக்கும் உறவினர்கள் மிகுந்த வேதனையில் இருக்கின்றனர். எங்களுக்கு அவர்களைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

அந்தக் கோயில், தேவாலயம் எப்படி ஆகிடுச்சுப் பாத்தியா என்று என் சகோதரி சந்திரா அழுதபோது தேற்றக்கூடிய வார்த்தை என்னிடம் இல்லை என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கை குண்டு வெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு நிதியுதவி அளித்த சீனா! எத்தனை கோடி தெரியுமா!
Next articleமுட்டையை ஃபிரிட்ஜில் வைத்தால் என்ன நடக்கும் தெரியுமா! ஜப்பானியர்களின் ரகசியம்! குளிர் சாதன பெட்டியில் எத்தனை நாட்கள் வைக்கலாம்!