Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal நள்ளிரவில் இளம் பெண்ணை மலைக்கு தூக்கிச் சென்று அரக்கர்கள் செய்த கொடுமை! தடுக்க வந்த தாய்...

நள்ளிரவில் இளம் பெண்ணை மலைக்கு தூக்கிச் சென்று அரக்கர்கள் செய்த கொடுமை! தடுக்க வந்த தாய் வெட்டிக் கொலை!

0
634

ஓடிசாவில் தாயின் கண்முன்னே சிறுமி சீரழிக்கப்பட்டுள்ளார். அதைத் தடுக்க வந்த அந்த பெண்ணின் தாயையும் வெட்டி கொலை செய்துவிட்டு, சுமார் ஓரு மாத காலம் தலைமறைவாக இருந்த அந்த கொடூரனை பொலிசார் கேரளாவில் கைது செய்துள்ளனர்.

ஜெய்பூர் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் கடந்த மாதம் 4ஆம் தேதியன்று ஒரு சிறுமியும், தாயும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற ஒரு இளைஞர்களிடம் உதவி கேட்டாள் அந்த சிறுமி. உடனடியாக இளைஞர்கள் பொலிசாருக்கு தகவல் கொடுத்ததால் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த இருவரையும் மீட்டு கட்டாக்கில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிறுமியின் தாயார் போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து அந்த சிறுமியிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், விக்கி என்பவனும், பிஜயா என்பவனும் சேர்ந்து தன்னை பலவந்தமாக கற்பழித்ததாக அழுது கொண்டே கூறினார். இதைப் பார்த்து தடுக்க வந்த தனது தாயை வெட்டிக் கொன்றதாகவும் தெரிவித்திருந்தார்.

கடந்த மே 2ஆம் தேதி நள்ளிரவில் பிஜயா தனது கூட்டாளி விக்கியுடன் சேர்ந்து சிறுமியை டியூலி மலைப்பகுதிக்கு தூக்கிச் சென்று போய் சீரழித்துள்ளான். அதிகாலை வரை இவர்கள் இருவராலும் மாறி மாறி சீரழித்துள்ளனர். இந்த இடைப்பட்ட நேரத்தில் அதை தடுக்க போராடிய சிறுமியின் தாயை கொடூரமாக வெட்டிக்கொன்று விட்டனர்.

இதனைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதில் விக்கியை கைது செய்த பொலிசார், தலைமறைவாக இருந்த பிஜயா பெகராவை தேடி வந்தனர். அவனது செல்போன் சிக்னலை வைத்து தேடி வந்ததில் அவன் கேரளாவில் இருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து ஓடிசா பொலிசார், விமானம் மூலம் விரைந்து சென்று பிஜயா கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

Previous articleஏடிஎம் மெஷினில் இரு முறை கேன்சல் பட்டனை அழுத்தினால் என்னவாகும் தெரியுமா! இணையத்தில் உலா வரும் தகவல்!
Next articleமீண்டும் மோதலுக்கு தயாராகும் மைத்திரி! விடுக்கப்பட்டது உடனடி பணிப்புரை!