சந்தோஷமாக வாழ நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்த வாழ்வியல் நெறிமுறைகள்! கட்டாயம் படியுங்கள்!

0

மனித வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய சில நெறிமுறைகளை நமது முன்னோர்கள் வகுத்த கொடுத்துள்ளனர்.அவற்றை இந்த பகுதில் பார்க்கலாம்….

* பூக்களை கட்டும்போது, இடைவெளி இருக்கக்கூடாது. அப்படி கட்டியுள்ள பூவை வாங்க வேண்டாம்.

* உதிரி பூக்களை வாங்கி நெருக்கமாக தொடுத்து அணிந்து கொள்ளுங்கள். கணவன் மனைவி இருவருக்கும் இடையே பிரிவு என்பதே வராது.

* செவ்வாய் கிழமை, வெள்ளி கிழமை போன்ற நல்ல நாட்களில் கணவன் மனைவி இருவரும் சண்டை போடாதீர்கள். பணம் வரத்தில் குறைவு ஏற்படும்.

* தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.

* உங்கள் வீட்டில் பூஜை அறை என்று தனியாக வைத்திருந்தால், அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது கடவுள் சக்தியைக் குறைக்கும்.

* அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

* பெண்கள் நெற்றியில் குங்குமம் வைக்காமல் பூஜை செய்யக்கூடாது.

* பெண்கள் பூசணிக்காய் உடைக்க கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.

* கர்ப்பிணி பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது.

* வீட்டின் நிலைகளில் குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.

* ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.

* வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்த்து வைக்க கூடாது.

* வீட்டில் யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது.

* விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.

* விரத தினத்தில் பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.

* ஈர உடையுடனும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.

* தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்ய கூடாது.

* புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு படைத்தல் கூடாது.

* தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் வைக்க வேண்டும்.

* செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம், செவ்வாய்,வெள்ளி கிழமைகள் லட்சுமிக்கு உகந்தவை. வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதால் வெண்ணையை உருக்கக் கூடாது என்பார்கள்.

* உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.

* பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் பொட்டு கட்டாயம் வைக்க வேண்டும்.

வீட்டில் அரளி பூச்செடி வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் அரளி பூச்செடியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும்.

* வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.

* வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.

* நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.

* தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகுடலில் தொந்தரவு செய்யும் புழுக்களை அழிக்க சில இயற்கை மருத்துவ முறைகள்!
Next articleஅலட்சியம் வேண்டாம்! உடலில் வலி இல்லாத கட்டிகள் இருந்தால் புற்றுநோயா?