Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan கஷ்டம் விலகுவதற்கு எந்த திசையை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும் தெரியுமா?

கஷ்டம் விலகுவதற்கு எந்த திசையை நோக்கி தீபம் ஏற்ற வேண்டும் தெரியுமா?

0
9092

நமது வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் நம்மை விட்டு நீங்க வேண்டும் என்றால் தெய்வத்தை வணங்கி, தீபம் ஏற்றும் போது, அந்த தீபத்தை கிழக்கு திசையை நோக்கி ஏற்ற வேண்டும்.

மேலும் நமது வாழ்வில் ஏற்படும் கஷ்டங்கள் நம்மை தொடராமல் இருப்பதற்கு, ஆன்மீக பழக்கவழக்கத்தில் இருக்கும் ஐதீகங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

கார்த்திகை மாதத்தின் ஐதீகங்கள்!

திருவண்ணாமலை மகா தீபத்தை பார்த்தால், அவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக இருக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதம், பவுர்ணமி திதி அன்று ஓட்டுச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வந்து நமது வீட்டிற்குள் வைத்தால், தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை மாதத்தில், சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும் என்பதால், கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் ஆகியவை செய்தால் நமது வீட்டில் செல்வம் சேரும்.

கார்த்திகை மாதத்தில், அதிகாலையில் எழுந்து நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மேலும் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்குரிய பலன்கள் கிடைக்கும். கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.

கார்த்திகை மாதம் பவுர்ணமிக்கு பின் வரும் சோமாவாரம், அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்கு பின் வரும் சோமாவாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.

Previous articleஇன்றைய ராசிபலன் 4.7.2018 புதன்கிழமை !!
Next articleவீட்டில் செல்வம் பெருகுவதற்கான சில வாஸ்து டிப்ஸ்!