தேநீருடன் தேங்காய் எண்ணெய் கலந்து சாப்பிட்டால் நன்மையா!

0

தேங்காய் எண்ணெய் மிகவும் எளிதாக கிடைக்கும் பொருள்களில் ஒன்று. இதனை சமையலுக்காகவும் பயன்படுத்துகிறோம். இந்த தேங்காய் எண்ணெயில் உள்ள நன்மைகள் பல.

தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன.

நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும், குழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.

காய்ச்சல் பாதிக்கப்பட்ட தினத்தில் காலையில் எழுந்ததும் பருகும் தேநீருடன் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து, குடித்தால் உடலில் ஏற்பட்ட‍ குளிர் அல்ல‍து காய்ச்ச‍ல் நீக்கி, முற்றிலும் சீரான வெப்ப‍ நிலையை உடல் முழுக்க‍ பரவச் செய்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபச்சை மிளகாயின் 10 மருத்துவ நன்மைகள்!
Next articleஆ(ண்)மை குறைபாட்டால் கவலையா? 48 நாட்கள் தொடர்ந்து இதை சாப்பிடுங்கள்! செவ்வாழையை சாப்பிட சொல்லுவதற்கு முக்கிய காரணமே இதுதாங்க!