தொங்கும் தொப்பையைக் கரைக்க உதவும் பானம்! முயற்சி செய்யுங்கள்!

0

உடலில் உள்ள கொழுப்புக்கள் ஆற்றலாக பயன்படுத்தப்படாமல் இருந்தால், அது வயிற்றில் தங்கி பானை போன்ற தொப்பையை உருவாக்கிவிடும். உடலில் பயன்படுத்தப்படாமல் இருக்கும் கொழுப்புக்கள் அடிவயிறு, தொடை, கைகளில் தான் தேங்கும். இதில் அடிவயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் கரைப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

இருப்பினும் உணவுக் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான சில பழக்கங்களைக் கொண்டிருப்பதன் மூலம், ஜிம் செல்லாமலேயே உடலின் மூலை முடுக்குகளில் தேங்கும் கொழுப்புக்களை விரைவில் கரைக்கலாம். சரி, இப்போது ஜிம் செல்லாமலேயே தொங்கும் தொப்பையைக் கரைக்கப் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள் குறித்து காண்போம்.

எலுமிச்சை நீர் எலுமிச்சை சாற்றினை ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து, சிறிது தேன் சேர்த்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இதனால் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, ஆங்காங்கு தேங்கியுள்ள கொழுப்பு செல்கள் கரைக்கப்படும்.

இறைச்சிக்கு பதிலாக சோயா

விலங்கு புரோட்டீனுக்கு பதிலாக சோயா புரோட்டீனை தினமும் 25 கிராம் சாப்பிட்டால், இரத்த கொலஸ்ட்ரால் அளவு குறையும். அதிலும் சோயா பால், சோயா சீஸ் அல்லது சோயா தயிர் போன்றவற்றை தினமும் உணவில் சேர்த்தால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம்.

காரமான உணவுகள்

உண்ணும் உணவுகளில் காரத்தை சற்று அதிகரித்துக் கொள்ளுங்கள். குறிப்பாக குடைமிளகாயை பொரியல் போன்று செய்து சாப்பிட்டு வந்தால், உடலின் மெட்டபாலிசம் அதிகரித்து, அடிவயிற்றில் உள்ள கொழுப்புக்கள் கரைக்கப்படும்.

ஏலக்காய்

ஏலக்காயும் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். மேலும் இதில் உள்ள காரத்தன்மை கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, கொழுப்புச் செல்களையும் கரைக்கும். எனவே தினமும் 3 கிராம் ஏலக்காய் பொடியை உணவில் சேர்த்து வாருங்கள்.

ஆப்பிள் சீடர் வினிகர்

எலுமிச்சை ஜூஸைப் போன்றே, தினமும் உணவு உண்பதற்கு முன் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து குடித்தால், செரிமானம் மேம்படும், பசியின்மை குறையும் மற்றும் கொழுப்புக்களின் தேக்கம் குறையும். வேண்டுமானால் சாலட் சாப்பிடும் போது, அத்துடன் சிறிது ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனாலும் நல்ல பலன் கிடைக்கும்.

கறிவேப்பிலை

கறிவேப்பிலை இரத்த கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கும். எனவே கறிவேப்பிலையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சாப்பிடுங்கள்.

அஸ்வகந்தா

அஸ்வகந்தா ஓரு ஆயுர்வேத நிவாரணி. இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும், உடல் பருமனுடன் தொடர்புடைய அழற்சியைக் குறைக்கும், மன அழுத்தம், சோர்வு போன்றவற்றையும் குறைக்கும். அதற்கு அஸ்வகந்தா இலை அல்லது வேரை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து, குடிக்க வேண்டும். இல்லாவிட்டால், அதன் பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.

வெந்தயம்

வெந்தயம் கல்லீரலில் கொழுப்புக்களின் தேக்கத்தைத் தடுக்கும். அதற்கு வெந்தயத்தை இரவில் படுக்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்நீருடன் வெந்தயத்தை உட்கொள்ள வேண்டும். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரபலம் திடீர் மரணம்..! நேரலையில் பேசிக்கொண்டிருந்த போது ஏற்பட்ட அசம்பாவிதம்!
Next articleநரை முடி விரவில் தோன்றாமலும் இருக்க ஒரு பாட்டி சொன்ன வைத்தியம் இது!