Home thatstamil one india tamil oneindia tamil தூக்கத்தில் தம்பி செய்த கொடூர செயல்!இரவு முழுவதும் போன் பேசிய அக்கா!

தூக்கத்தில் தம்பி செய்த கொடூர செயல்!இரவு முழுவதும் போன் பேசிய அக்கா!

0
1555

தனது அக்கா எந்நேரமும் போன் பேசிக் கொண்டே இருந்தமையால், அக்காவின் கழுத்தை தம்பி நெரித்துக் கொன்ற சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தானே மாவட்டத்தை சேர்ந்த 19 வயது மாணவி ஒருவர் தனது நண்பருடன் எந்நேரமும் அதாவது தூங்கும் நேரத்திலும் போன் பேசிக் கொண்டே இருந்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த பெண்ணின் உறங்கிக்கொண்டிருக்கும் போது அக்கா போனில் பேசிக்கொண்டிருந்ததை பார்த்து, ஆத்திரம் கொண்ட தம்பி உறக்கத்தில் இருந்து எழுந்து ஏன் எந்நேரமும் போன் பேசிக் கொண்டே இருக்கிறாய் என அவருடன் சண்டையிட்டுள்ளார்.

ஒரு கட்டத்தில் கோபம் மேலும் அதிகரித்தமையால் அவரது தம்பி, தலையணையை எடுத்து, அக்கா எனவும் பாராமல் அவரை மூச்சு திணற வைத்து கொன்றுள்ளான்.

இதனையறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பெண்ணின் உடலை மீட்டனர்.

மேலும் கொலை செய்த அந்த பெண்ணின் தம்பியை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Previous articleஆயிரக்கணக்கில் இறந்து கிடக்கும் இது என்ன தெரியுமா? காரணம் தெரிந்தால் அதிர்ந்து போயிடுவீங்க!
Next articleகாதலியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட மகத்!