திருமணத்திற்கு 5 நாட்கள் முன்பு மணமகளின் கையை துண்டாக்கிய முதலை: மணமகன் எடுத்த நெகிழ்ச்சி முடிவு!

0
652

ஜிம்பாவே நாட்டில் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் முதலை கடித்ததால் மணமகளின் வலது கை துண்டிக்கப்பட்ட நிலையில், மருத்துவமனையில் வைத்து குறிக்கப்பட்ட நாளில் திருமணம் நடைபெற்றுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிம்பாவே நாட்டை சேர்ந்த Zanele Ndlovu என்ற பெண்ணும், பிரித்தானியாவின் தேசிய டென்னிஸ் வீரர் Jamie Fox- ம் காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரது திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததையடுத்து, திருமணம் முடிவானது. இந்நிலையில் திருமணத்திற்கு 5 நாட்கள் இருக்கையில் இவர்கள் இருவரும் சேர்ந்து விக்டோரியா அருவிக்கு அருகில் குளிக்க சென்றுள்ளனர்.

அங்கு, குளித்துக்கொண்டிருக்கையில் திடீரென வந்த முதலை Ndlovu – வின் கையை தனது வாயால் கவ்வியுள்ளது. இதில் பலத்த போராட்டத்திற்கு பின்னர் முதலையின் பிடியில் இருந்து தனது காதலியை Jamie மீட்டுள்ளார்.

ஆனால், துரதிஷ்டவசமாக அவரது வலதுகை துண்டிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டதில், Ndlovu – வின் உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. சுமார் 4 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்ட பின்னர், குறித்த திகதியில் மருத்துவமனையில் வைத்து தனது காதலியை திருமணம் செய்துகொண்டார் Jamie.

இதுகுறித்து Jamie கூறியதாவது,எனது காதலி மிகவும் அற்புதமானவள், அவளை திருமணம் செய்துகொண்டதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவளுக்கு ஒரு கை இல்லை என்றால் பரவாயில்லை, நான் அவளது நம்பிக்கையாக இருப்பேன் என கூறியுள்ளார்.

மேலும், Jamie இந்த முடிவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Previous articleகவர்ச்சிப் படத்தை வெளியிட்ட ‘இருட்டறையில் முரட்டு குத்து’ நாயகி!
Next articleடயானாவின் சகோதரியுடன் டேட்டிங்கில் இருந்த இளவரசர் சார்லஸ்: சீக்ரெட் தகவல்!