Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal டயானாவின் சகோதரியுடன் டேட்டிங்கில் இருந்த இளவரசர் சார்லஸ்: சீக்ரெட் தகவல்!

டயானாவின் சகோதரியுடன் டேட்டிங்கில் இருந்த இளவரசர் சார்லஸ்: சீக்ரெட் தகவல்!

0
579

69 வயதான பிரித்தானிய இளவரசர் சார்லஸ், டயானாவை திருமணம் செய்துகொள்வதற்கு முன்னர் அவரது மூத்த சகோதரியுடன் டேட்டிங்கில் இருந்துள்ளார்.

இளவரசர் ஹரி போலவே அவரது தந்தையும் தனது இளம்வயதில் பல்வேறு பெண்களுடன் கிசுகிசுக்கப்பட்டவர்.

டயானாவை திருமணம்செய்து கொள்வதற்கு முன்னர் இவரது வாழ்வில் சுமார் 4 பெண்கள் இருந்துள்ளனர். அதில், ஒருவரான கமீலாவுடன் தனது தொடர்பை டயானவை திருமணம் செய்து கொண்ட பின்னரும் தொடர்ந்துள்ளார்.

இதன் காரணத்தினாலேயே சார்லஸை, டயானா விவாகரத்து செய்ததாக கூறப்படுகிறது.

Lady Sarah Spencer –க்கு 22வயது இருக்கையில் சார்லஸை சந்தித்துள்ளார். அப்போது டயானாவுக்கு வயது 16.

டயானாவின் மூத்த சகோதரியான சாராவுடன், சார்லஸ் சுமார் 2 ஆண்டுகள் டேட்டிங்கில் இருந்துள்ளார்.

இவர்கள் இருவரும் சேர்ந்து பலமுறை பொதுஇடங்களுக்கு சென்றுள்ளதை புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.

டயானாவின் சந்திப்பு கிடைத்த பின்னர், சாராவை சார்லஸ் கைவிட்டதாக கூறப்படுகிறது. டயானாவை சார்லஸ் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற செய்தி அறிவிக்கப்பட்டவுடன், நான் தான் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தேன், சார்லஸ் இளவரசராக இல்லாவிட்டால் நான் அவரை திருமணம் செய்துகொள்வேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் சாரா.

திருமணத்திற்கு பின்னரும், தனது சகோதரி சாராவுடன், டயானா தொடர்பில் இருந்துள்ளார்.ஏனெனில் சாரா , டயானாவின் நம்பிக்கைக்குரியவர்.

டயானாவின் இறப்பிற்கு பின்னர் சாரா பிரான்ஸ் நாட்டில் செட்டிலாகிவிட்டார். ஆனால், வில்லியம் மற்றும் ஹரியுடன் தனது குடும்ப உறவை பேணிக்காத்தார்.

மே 19 ஆம் திகதி, நடைபெறவிருக்கும் ஹரியின் திருமணத்தில் கூட சாராவுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleதிருமணத்திற்கு 5 நாட்கள் முன்பு மணமகளின் கையை துண்டாக்கிய முதலை: மணமகன் எடுத்த நெகிழ்ச்சி முடிவு!
Next articleஇன்றைய ராசிபலன் 9.5.2018 புதன்கிழமை!