தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா!

0

நமது உடலின் செயல்பாடுகள் அனைத்தும் முறையாக செயல்படுவதற்கு தண்ணீர் இன்றியமையாத ஒன்றாகும்.

மேலும் உடலில் 70 சதவீத தண்ணீர் தசைகளிலும், 90 சதவீத தண்ணீர் மூளையிலும் மற்றும் 83 சதவீத தண்ணீர் இரத்தத்திலும் கலந்து உள்ளது.

இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வருவதின் மூலம் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், நமது குடல் சுத்தமாக்கப்படும். இதனால் சிறிது நேரத்திலேயே சீரான முறையில் மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் மலம் கழிக்க முடிகிறது.

தண்ணீரானது நமது உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்கள் மற்றும் கிருமிகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றி, எப்போதும் நமது உடலின் சுறுசுறுப்புத் தன்மையை அதிகரிக்கச் செய்கிறது.

தண்ணீரை நாம் அதிகமாக குடித்தால், நமது உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கப்படும். இதனால் நீரிழிவு நோய் மற்றும் அடிக்கடி ஏற்படும் தலைவலி பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது.

அதிகாலையில் தினமும் 1 மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடித்து விட்டு பின் சாப்பிட்டால் அல்சர் பிரச்சனை மூலம் ஏற்படும் தீவிரத்தை வராமல் தடுக்கலாம்.

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், ரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதிகப்படியான ஆக்ஸிஜன் கிடைப்பதால், நமது உடலானது எனர்ஜியுடன் இருக்கும்.

அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், உடலின் மெட்டபாலிசம் மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, உடல் எடை குறைக்கிறது.

தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், அல்சர் ஏற்படாமல் தடுக்கலாம்.

தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வந்தால், உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறி, விரைவில் பசி எடுக்க ஆரம்பித்துவிடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட அற்புத செடி!
Next articleபுகைப்படம் உள்ளே! வயிற்றிலே கலைந்துபோன 14 வார குழந்தை கருவின் புகைப்படத்தை தைரியமாக வெளியிட்ட பெண்!