ரத்த குழாயில் கொழுப்பு படியாமல் இருக்க இதோ டிப்ஸ்!

0

ஆலிவ் எண்ணெய்
சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

தக்காளி
தக்காளியை வேக வைத்துத் தோலுரித்து மிக்சியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளவும். வடிகட்டிய தக்காளி ஜூஸை கொதிக்க வைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப்பாக செய்து காலையிலோ அல்லது மாலையிலோ தொடர்ந்து அருந்தி வந்தால் பசியைத் தூண்டுவதுடன் சாப்பிட்ட உணவை சுலபமாக ஜீரணிக்கவும் உதவும்.

இதனால் ரத்த ஓட்டம் சீராகி சருமம் ஜொலிக்கும். காலைச் சிற்றுண்டியுடன் பால், சர்க்கரை சேர்க்காத தக்காளி ஜூஸை அளவாகத் தொடர்ந்து அருந்தி வர, சருமம் பளிச் தான்.

எடைக்குறைப்பு இன்று பெரும் பிரச்சனையாக மாறிவிட்டது. எடைக்குறைப்புக்கு கைக்கொடுக்கும் வீட்டு மருத்துவத்தில் எடை குறையச்செய்யும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது.

உங்கள் சமையலறை பொருட்களை பயனபடுத்தியே எடையைக் குறைக்கச் செய்யலாம்.

தினமும் காலையில் சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டையை தூளாக்கி நன்குகொதிக்க வைத்த தண்ணீருடன் தேனையும் கலந்து குடிக்க வேண்டும்.

இதேபோல் இரவு தூங்குவதற்கு முன்பும் ஒரு கப் தண்ணீரில் இலவங்கப்பட்டையின் தூளையும், தேனையும் கலந்து சாப்பிடலாம். இதை வழக்கமாக செய்து வந்தால் பருமனான உடல் கொண்டவர்கள் எளிதில் எடையை குறைத்து விடலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்சுலின் ஹார்மோன் சுரக்க உதவும் கம்பு!
Next articleபதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி! கணவரின் கண்முன்னே துடிதுடித்து இறந்த மனைவி: