தினமும் இந்த அற்புத ஜூஸை குடிங்க ரத்த சோகையை குணப்படுத்துமாம்!

0

ஒருவரின் இரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவு மிகக் குறைவுபடும்போது இரத்த சோகை ஏற்படுகிறது.

குறிப்பாக அன்றாட உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இல்லாமல் இருப்பது, பெருங்குடலில் இருக்கும் நாடாப்புழு இரும்புச் சத்தை உறிஞ்சிக் கொள்வது, சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் கிரகிக்க முடியாமல் போவது, எலும்பு மஜ்ஜை பாதிப்பு, மாதவிடாய் கோளாறுகளால் அதிக ரத்தப் போக்கு போன்றவை முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றது.

மயக்கம், சோர்வு, உடல் வெளுத்து காணப்படுவது, நகங்களில் குழி விழுதல், நாக்கு வெளுத்து இருத்தல், மூச்சு விடுவதில் சிரமம், இதயத் துடிப்பு அதிகரிப்பு, குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை போன்றவை இதற்காக முக்கிய அறிகுறிகள் ஆகும்.

இந்த பிரச்சினையை சரியான நேரத்தில் சரி செய்யாவிட்டால் தீவிர உடல் நல பிரச்சினையை ஏற்படுத்தி விடும் எனவும் சொல்லப்படுகின்றது.

இதற்கு ஒரு அற்புதமான பானம் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதனை எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்
மாதுளை பழம் ஜூஸ் – 1 டம்ளர்

எள்ளுப் பொடி – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை
முதலில் தேவையான அளவு எள்ளுப் பொடியை மாதுளை ஜூஸில் கலந்து கொள்ளவும். பின்னர் நன்றாக கலக்க வேண்டும்.

இந்த ஜூஸை தினமும் காலையில் காலை உணவுக்கு பின் 2 மாதத்திற்கு குடித்து வந்தால் இரத்த சோகையிலிருந்து விடுபடலாம்.

மாதுளை மற்றும் எள் பொருட்கள் அதிகளவு இரும்புச் சத்து மற்றும் புரோட்டீன்கள் கொண்டு இருப்பதால் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கின்றது.

மேலும் இதனுடன் இரும்புச் சத்து அதிகமான உணவுகளான கீரைகள், பீட்ரூட், மாமிசம் போன்றவற்றையும் சாப்பிட்டு வந்தால் விரைவில் நல்ல மாற்றத்தை காணலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநான்கே நாளில் பாதவெடிப்பை போக்க வேண்டும்! கற்றாழையை இப்படி யூஸ் பண்ணுங்க!
Next articleநீங்க மேஷ ராசியா? அப்போ திருமண உறவில் கட்டாயம் இந்த 5 பிரச்னைய சந்திச்சே ஆகணும் !