தலைவலியை நொடியில் குணப்படுத்த இந்த இடத்தில் இரண்டு நிமிடம் மசாஜ் செய்தால் போதும்!

0

மனித உடல் என்பது பல அதிசயங்களும், ஆச்சரியங்களும் நிறைந்ததாகும். மனித உடலில் மறைந்திருக்கும் ரகசியங்களை தெரிந்து கொள்ளும் ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

நமது உடலின் சில பகுதிகளை தூண்டுவது உடலில் இருக்கும் வலி மற்றும் விரும்பத்தகாத உணர்வுகளை குறைக்கும் வழியாகும். அப்படி உடலில் இருக்கும் சில பாகங்களை தூண்டினால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தலைவலியை குணப்படுத்தும்
உங்கள் கையில் வலியை குறைக்கும் மாத்திரைகள் இல்லையென்றால், நீங்கள் உங்கள் கட்டை விரலுக்கும், ஆள்காட்டி விரலுக்கும் இடையில் உள்ள பகுதியில் மசாஜ் செய்யவும். இந்த மசாஜ் உங்கள் தலைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் தலைவலியை குறைக்கும்.

ரிலாக்ஸ் ஆக்க உதவும்
நீங்கள் அதிக மனஅழுத்தத்தில் இருந்து விடுபட விரும்பினால் உங்கள் மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு முகத்தை குளிர்ந்த நீரால் நன்கு கழுவவும். குளிர்ந்த நீர் உங்களின் சுழற்சியை அதிகரிப்பதுடன் உங்களை ரிலாக்ஸாக உணர வைக்கும். இது பல நாடுகளில் பல நூற்றாண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஒரு குணப்படுத்தும் முறையாகும்.

தொண்டை புண்ணை குணப்படுத்த
தொண்டை புண்ணை குணப்படுத்த டீ குடிப்பது நல்ல மருந்தாக கருதப்படுகிறது. ஆனால் அதனை விட எளிய வழி ஒன்று உள்ளது. உங்கள் தொண்டையில் பிரச்சினை ஏற்பட்டால் உங்கள் காதை திருகவும். உங்கள் காதில் இருக்கும் நரம்புகளை தூண்டுவதன் மூலம் உங்கள் தொண்டை பிரச்சினைகளை குணப்படுத்தி நிவாரணத்தை வழங்கும்.

ஊசி பயத்தை நீக்கும்
ஊசி போடுவது குறித்து அனைவருக்குமே அடிமனதில் சிறிய பயம் இருக்கும். ஆனால் இந்த பயத்தை போக்க ஒரு எளிய வழி உள்ளது. ஊசி போடுவதற்கு முன் சிறிது இருமினால் ஊசி மீது இருக்கும் பயம் போய்விடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article17 வயது மாணவனை மயக்கி பலமுறை உறவு கொண்ட 45 வயது பெண்! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!
Next articleசினிமா அரசியலென கொடிகட்டிப்பறந்த விஜயகாந்தின் குடும்பத்திற்கு இப்படியொரு நிலையா! அதிர்ச்சியில் தமிழகம்!