சம்மணங்கால் போட்டுத் தரையில் உட்கார்ந்து சாப்பிடுவதன் அருமையும் அர்த்தமும் புரிந்திருந்தால், இன்று நாம் டைனிங்டேபிளிலோ, சோஃபாவிலோ கால் மீது கால் போட்டுக்கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருக்க மாட்டோம்.
உடல் உபாதைகள் வருவதற்கு முக்கியமான காரணம் தரையில் அமராமல் கண்டபடி அமர்ந்து சாப்பிடும் முறையினால். தரையில் அமர்வதே ஒரு வகை யோகாதான்.அதாவது பத்மாசனா’ நிலையில் இருக்கும் போது வயிற்றைச் சுற்றிய தசைகள் இறுக்கமடைவதால், அந்த இடத்தில் ஏற்படும் வலிகள் குறைகின்றன.
இந்த ஆசன நிலையில் வயிறு அழுத்தப்படாமல் இருப்பதால், நாம் திருப்தியாக சாப்பிட முடியும் சப்பணமிட்டுச் சாப்பிடுவதில் பலன்கள் எக்கச்சக்கம்!
தரையில் அமர்ந்து சாப்பிடும்போது, இயல்பாகவே முன்பக்கமாக வளைந்தும், உணவை விழுங்கும்போது நிமிர்ந்தும் சாப்பிடுவோம். இப்படி முன்னும் பின்னும் அசைவதால், அடிவயிற்றில் உள்ள தசைகளின் இயக்கம் சிறப்பாக இயங்கும்.
தரையில் அமர்ந்து உண்பதால் கவனம் எங்கும் சிதறாமல், உணவின் மீது இருப்பதால் நாம் இவ்வளவு தான் சாப்பிட வேண்டும் என்பதை மூளை தெளிவாக நமக்குச் சொல்லி விடுகிறது.
இதனால் நாம் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட வேண்டிய அவசியமில்லை. இது உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும்.
தரையில் அமர்வது சற்று சிரமமாக இருக்கலாம். நரம்புகள் நன்கு வலிமையாக இருந்தால், இரத்த ஓட்டத்தில் தடை ஏற்படுவதில்லை. எவ்வளவு மடங்கினாலும் மெதுவாக ரத்தம் உடம்பின் கீழ்ப் பகுதிக்குச் செல்லும்.
அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருப்பதால் இவை மிகவும் இலகுத் தன்மை அடைந்து நோய்களை அண்டவிடாமல் தடுக்கிறது.
பத்மாசனம் என்னும் யோகாவினை அன்றாட வாழ்வில் நாம் கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே, பெரியவர்கள் தரையில் அமர்ந்து சாப்பிட வேண்டும் என்றார்கள். இது நோயின்றி நீண்ட நாள் வாழ உதவும்.
By: Tamilpiththan