தத்தளிக்கும் மகனுக்கு பண உதவி அளித்த பிரித்தானிய பெற்றோர்! நீதிமன்றம் அளித்த தீர்ப்பு!

0

சிரியாவில் ஐ.எஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்ட இளைஞரை, அங்கிருந்து காப்பாற்ற பண உதவி அளித்த பிரித்தானிய பெற்றோருக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது.

இது பிள்ளைகள் மீது பாசம் வைத்திருக்கும் அன்பான பெற்றோர்கள் மீது முன்னெடுக்கப்படும் மனிதாபிமானமற்ற செயல் என அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

சாலி லேன் மற்றும் ஜான் லெட்ஸ் தம்பதிகளின் மகனான, தற்போது 23 வயதாகும் ஜாக் லெட்ஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், அவர் இஸ்லாம் மதத்தை தழுவிய பின்னர் ஈராக்கிய இளம்பெண்ணை திருமணம் செய்துகொண்டு, ஐ.எஸ் பயங்கரவாத குழுவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்துள்ளார்.

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பயங்கரவாத ஆதரவு கருத்துகளை பதிவு செய்து வந்த ஜாக் லெட்ஸ் தொடர்பில் பிரித்தானிய அதிகாரிகளுக்கு தெரியவந்தது.

இந்த நிலையில், ராணுவ உடையில்; இருக்கும் தமது பாடசாலை நண்பரின் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவு செய்த ஜாக்,

அவரது குழுவில் உள்ள அனைத்து ராணுவ வீரர்களையும் கொலை செய்ய ஆசைப்படுவதாக கருத்து தெரிவித்திருந்தார்.

ஜாக் லெட்ஸின் இந்த கருத்துகளை கடுமையாக எதிர்ந்த சாலி லேன் மற்றும் ஜான் லெட்ஸ் தம்பதிகள், தங்கள் மகன் ஐ.எஸ் அமைப்பில் இணைந்த தகவல் கேட்டு அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.

இருப்பினும், சொந்த மகனை கைவிட மனம் வராத சாலி லேன் மற்றும் ஜான் லெட்ஸ் தம்பதிகள், கடந்த 2015 ஆம் ஆண்டு 223 பவுண்டுகள் அனுப்பி வைத்துள்ளது.

மேலும், அதே ஆண்டு டிசம்பர் மாதம் 1000 பவுண்டுகள் அனுப்பி வைத்துள்ளது. ஆனால் பிரித்தானிய அதிகாரிகளால் அந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.

தற்போது இந்த விவகாரமே, தீவிரவாதத்திற்கு சாலி லேன் மற்றும் ஜான் லெட்ஸ் தம்பதிகள் நிதியுதவி அளித்ததாக நீதிமன்ற தண்டனைக்கு வழிவகுத்துள்ளது.

2017 ஆம் ஆண்டு அமெரிக்க ஆதரவு படைகளால் ஐ.எஸ் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்ட நிலையில், எஞ்சிய ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டு சிரியா மற்றும் ஈராக் சிறைகளில் விசாரணையை எதிர்நோக்கி உள்ளனர்.

இதில், ஜாக் லெட்ஸ் குர்துகளின் கீழில் உள்ள சிறை ஒன்றில் அடைக்கப்பட்டுள்ளார். அங்கிருந்து அவரை காப்பாற்றும் நோக்கிலேயே சாலி லேன் மற்றும் ஜான் லெட்ஸ் தம்பதிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் அதுவே அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது. எதிர்காலத்தில் சட்டத்துக்கு புறம்பான செயல்களின் ஈடுபடாதவரை, தற்போது விதிக்கப்பட்டுள்ள 15 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டாம் என நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.

இருப்பினும் தங்களது மகனை காப்பாற்றும் செயலில் தாங்கள் கண்டிப்பாக ஈடுபடுவோம் என சாலி லேன் மற்றும் ஜான் லெட்ஸ் தம்பதிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleதிருமணமான சில நாட்களில் வாட்ஸ் அப்பில் வந்த மனைவி புகைப்படம்! அதிர்ந்து போன கணவன்!
Next articleகுப்பை தொட்டியில் கிடந்த குழந்தை! பார்த்த பிரபல இயக்குனர் செய்த செயல்!